Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நார்தர்ன் ஆர்க் நிகர லாபம் 41% உயர்வு

நார்தர்ன் ஆர்க் நிகர லாபம் 41% உயர்வு

நிகர வட்டி வருவாய் 32 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.425 கோடியாக அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நார்தர்ன் ஆர்க் கேபிடல் நிறுவனத்தின் 2027-ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 41 சதவீதம் அதிகரித்து ரூ.129 கோடியாக உயர்ந்துள்ளது.

இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 32 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.425 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் செலவு 2.66 சதவீதமாக இருந்தது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆஷிஷ் மெஹ்ரோத்ரா கூறியதாவது:


2027-ம் நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவனத்தின் நிதிச் சேவை வணிகம் விரிவடைந்துள்ளது. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் உருவான நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு (D2C AUM) ரூ.12,500 கோடியைக் கடந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பில் 66 சதவீதமாகும்.


இரண்டாவது காலாண்டில் கடன் தீர்வுகள் வணிகத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் அளவு 60 சதவீதம் அதிகரித்து ரூ.4,088 கோடியாக உயர்ந்துள்ளது. குறைந்த மூலதனத் தேவையுடன் கட்டண வருவாயை அதிகரிக்கும் வகையிலான கடன் தீர்வுகளை விரிவுபடுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.


நிறுவனத்தின் மொத்த நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 34 சதவீதம் அதிகரித்து ரூ.19,003 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


முந்தைய செய்தி
தவெக சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
அடுத்த செய்தி
எக்விடாஸ் இடைக்கால சிஇஓ நியமனம்

தொடர்புடைய செய்திகள்