Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எக்விடாஸ் இடைக்கால சிஇஓ நியமனம்

எக்விடாஸ் இடைக்கால சிஇஓ நியமனம்

சிட்டி வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பகிரவும் WhatsApp Facebook

எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக வங்கியின் முழுநேர இயக்குநரும், செயல் இயக்குநருமான பாலாஜி நுதலபாடியை நியமிக்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான வாசுதேவன் அண்மையில் ராஜினாமா செய்தார். தனது மகள் வங்கி சாரா நிதி நிறுவனத்தில் இணை நிறுவனராக இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் நலன் முரண்பாடு குறித்த கவலை எழுந்துள்ளது. எனவே, தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.


இதைடுத்து, எக்விடாஸ் வங்கியில் செயல் இயக்குநராகப் பணியாற்றி வரும் பாலாஜி நுதலபாடியை இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க, அவ்வங்கியின் நியமனம் மற்றும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், புதிய நியமனம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


எக்விடாஸ் வங்கியின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனப்படுத்துதலில் முக்கியப் பங்காற்றி உள்ள பாலாஜி நுதலபாடி, முன்னர் சிட்டி வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

 இந்தியா மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் சொத்து விற்பனை, செல்வ மேலாண்மை, நுகர்வோர் சேவைகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றி உள்ளார்.

முந்தைய செய்தி
நார்தர்ன் ஆர்க் நிகர லாபம் 41% உயர்வு
அடுத்த செய்தி
ஊத்துக்குளி வெண்ணெயில் தயாராகும் AASHIRVAAD நெய்

தொடர்புடைய செய்திகள்