Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

9 நிறுவனப் பங்குகள் 67% வரை உயர வாய்ப்பு

9 நிறுவனப் பங்குகள் 67% வரை உயர வாய்ப்பு

9 நிறுவனங்களின் பங்குகள் 67 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

எஸ்பிஐ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் பங்குகள் 67 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளின் அடிப்படையில், 9 நிறுவனப் பங்குகளின் இலக்கு விலைகளை அந்நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
இதன்படி, யுரேகா ஃபோர்ப்ஸ் பங்கு 67 சதவீதமும், எஸ்பிஐ பங்கு 35 சதவீதமும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு 30 சதவீதமும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.


எஸ்பிஐ பங்கின் இலக்கு விலை ரூ.1,245-லிருந்து ரூ.1,270 ஆகவும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கின் இலக்கு ரூ.440-லிருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


யுரேகா ஃபோர்ப்ஸ் பங்கின் இலக்கு ரூ.570 ஆகத் தொடர்கிறது. கேஇசி இன்டர்நேஷனல் பங்கின் இலக்கு ரூ.534-லிருந்து ரூ.422 ஆகக் குறைக்கப்பட்டாலும், 19 சதவீத உயர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


பஜாஜ் ஃபின்சர்வ் பங்கின் இலக்கு ரூ.2,175 ஆகவும், மேக்ஸ் ஹெல்த்கேர் பங்கின் இலக்கு ரூ.1,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோநெட் எல்என்ஜி பங்கின் இலக்கு ரூ.288 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, ஆர்டர் நிலவரம், நிதிச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி
பிரபல முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்த 2 பங்குகள் கடும் சரிவு
அடுத்த செய்தி
அதிகாலை 3.15 மணிக்கே வர்த்தகம்

தொடர்புடைய செய்திகள்