Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.48,263 கோடிக்கு பங்குகளை வாங்கிய அந்நிய முதலீட்டாளர்கள்

ரூ.48,263 கோடிக்கு பங்குகளை வாங்கிய அந்நிய முதலீட்டாளர்கள்

கடந்த வாரத்துக்கான பங்குச் சந்தைகளின் தற்காலிக ரொக்கப் பிரிவு தரவுகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர கொள்முதல் ரூ.45,960 கோடியாகப் பதிவாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளிக்கு முந்தைய ஐந்து வர்த்தக அமர்வுகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.48,263 கோடி அளவுக்கு நிகர கொள்முதல் செய்துள்ளனர். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பங்குகளை விற்று வந்த அவர்கள், நவம்பர் தொடக்கத்தில் மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

நவம்பர் 2 முதல் 6 வரையிலான அமர்வுகளில், வியாழனன்று ரூ.16,277.99 கோடிக்கும், வெள்ளியன்று ரூ.13,749.82 கோடிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகரமாகப் பங்குகளை வாங்கியுள்ளனர். இந்த இரு நாட்களில் மட்டும் நிகர கொள்முதல் ரூ.30,000 கோடியைக் கடந்தது. கடந்த 15 அமர்வுகளில் மூன்று நாட்களில் மட்டுமே அவர்களது விற்பனை, கொள்முதலைவிட அதிகமாக இருந்தது.

கடந்த வாரத்துக்கான பங்குச் சந்தைகளின் தற்காலிக ரொக்கப் பிரிவு தரவுகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர கொள்முதல் ரூ.45,960 கோடியாகப் பதிவாகியுள்ளது. அதே தரவுகளின்படி, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அந்த வாரத்தில் ரூ.24,197 கோடி மதிப்பிலான பங்குகளை நிகரமாக விற்றனர். இதில் வெள்ளிக்கிழமை மட்டும் அவர்களது நிகர விற்பனை ரூ.5,968.70 கோடியாக இருந்தது.

சந்தை ஏற்றத்தில் முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக பங்காற்றின. கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் நிஃப்டி 50 குறியீடு 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. அதே காலத்தில் நடுத்தர நிறுவனப் பங்குகளின் குறியீடு 5.8 சதவீதமும், சிறிய நிறுவனப் பங்குகளின் குறியீடு 2.7 சதவீதமும் உயர்ந்தன. 

கச்சா எண்ணெய் விலை சரிந்ததும் இந்தியப் பங்குச் சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. சமீபத்தைய கொள்முதலால், இந்த ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர விற்பனை 2,700 கோடி டாலருக்குக் கீழ் குறைந்தது.

முந்தைய செய்தி
தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தையொட்டி 16% வரை உயர வாய்ப்பு
அடுத்த செய்தி
கார்டிரேட் டெக் பங்குகள் ரூ.470 கோடிக்கு விற்பனை

தொடர்புடைய செய்திகள்