Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லாபம் இரட்டிப்பானாலும் எம்சிஎக்ஸ் பங்கு சரிவு

லாபம் இரட்டிப்பானாலும் எம்சிஎக்ஸ் பங்கு சரிவு

எதிர்பார்த்ததைவிட அதிக வரிச் செலவு, தொழில்நுட்பச் செலவு ஆகியவை பங்கின் சரிவுக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் இரட்டிப்புக்கும் அதிகமாக உயர்ந்தபோதிலும், எம்சிஎக்ஸ் நிறுவனப் பங்கு நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 5.4 சதவீதம் சரிந்தது.

இந்திய பண்டக வர்த்தகச் சந்தை நிறுவனமான எம்சிஎக்ஸ், செப்டம்பர் காலாண்டில் ரூ.455 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. மொத்த வருவாய் ரூ.374.23 கோடியிலிருந்து ரூ.799.66 கோடியாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், எதிர்பார்த்ததைவிட அதிக வரிச் செலவு, தொழில்நுட்பச் செலவு ஆகியவை பங்கின் சரிவுக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. காலை வர்த்தகத்தில் பங்கு ரூ.3,300.90 ஆகக் குறைந்தது.

இதற்கிடையே, ஜெஃப்ரீஸ் நிறுவனம் ரூ.4,000 இலக்கு விலையுடன் வாங்கப் பரிந்துரைத்துள்ளது. மார்கன் ஸ்டான்லி ரூ.3,835 இலக்கு நிர்ணயித்துள்ளது. வர்த்தக வருவாய் வளர்ச்சியும் சர்வதேச அரசியல் நிச்சயமற்ற சூழலில் பண்டக வர்த்தகத்தின் முக்கியத்துவமும் சாதகமாக இருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்தி
India, Germany exploring new areas of energy cooperation
அடுத்த செய்தி
Indus Towers steps up solar adoption amid energy costs, sustainability pressures

தொடர்புடைய செய்திகள்