Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எஃகு கழிவு விலைக்கு குறியீடு என்சிடிஇஎக்ஸ் ஒப்பந்தம்

எஃகு கழிவு விலைக்கு குறியீடு என்சிடிஇஎக்ஸ் ஒப்பந்தம்

சந்தைத் தரவுகள் சேகரிப்பு, எஃகு கழிவுகளின் தர வகைப்பாடு, விலை மதிப்பீடு உள்ளிட்ட பணிகளை பிக்மின்ட் மேற்கொள்ளும்.

பகிரவும் WhatsApp Facebook

எஃகு கழிவுகளின் விலையை வெளிப்படையாக நிர்ணயிக்க, தேசிய சரக்கு மற்றும் பரிவர்த்தனை சந்தையான என்சிடிஇஎக்ஸ், பிக்மின்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, பிக்மின்ட் நிறுவனம் தினசரி மதிப்பிடும் எஃகு கழிவுகளின் சந்தை விலை, விரைவில் அறிமுகமாகவுள்ள முன்பேர வர்த்தக ஒப்பந்தங்களின் இறுதித் தீர்வு விலைக்கு அடிப்படையாக அமையும்.

சந்தைத் தரவுகள் சேகரிப்பு, எஃகு கழிவுகளின் தர வகைப்பாடு, விலை மதிப்பீடு உள்ளிட்ட பணிகளை பிக்மின்ட் மேற்கொள்ளும். மேலும், முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வர்த்தகப் புழக்கத்தை அதிகரிக்கவும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்.

இந்தக் கூட்டணி, எஃகு துறையில் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்த உதவும் என என்சிடிஇஎக்ஸ் நிர்வாக இயக்குநர் விகாஸ் கோயல் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
டாக்டர் அகர்வால்ஸ் H1 லாபம் 50% உயர்வு
அடுத்த செய்தி
டிவிடெண்ட் மழையில் பொதுத்துறை பங்குகள்

தொடர்புடைய செய்திகள்