Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

17 பங்குகளில் 83% வரை லாப வாய்ப்பு

17 பங்குகளில் 83% வரை லாப வாய்ப்பு

ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் பங்கிற்கு ரூ.4,065 இலக்கு விலையும், 36 சதவீத உயர்வு வாய்ப்பும் கணிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகளை ஆய்வு செய்த ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம், 17 பங்குகளில் அதிகபட்சமாக 83 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மருந்து, நிதிச் சேவை, சில்லறை வர்த்தகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களின் பங்குகள் குறித்த மதிப்பீடுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில், எச்ஜி இன்ஃப்ரா பங்கு 83 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாகக் கணித்து, இலக்கு விலையை ரூ.701 ஆக நிர்ணயித்துள்ளது. ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்கிற்கு ரூ.315 இலக்கு விலையுடன் 53 சதவீத உயர்வு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்டைலம் இண்டஸ்ட்ரீஸ் பங்கிற்கு ரூ.4,065 இலக்கு விலையும், 36 சதவீத உயர்வு வாய்ப்பும் கணிக்கப்பட்டுள்ளது.

எம்சிஎக்ஸ் பங்கிற்கு ரூ.4,000, நிவா பூபா பங்கிற்கு ரூ.95, சுந்தரம் ஃபைனான்ஸ் பங்கிற்கு ரூ.4,985 இலக்கு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்இ பங்கின் இலக்கு விலை ரூ.3,900-லிருந்து ரூ.4,180 ஆகவும், ஜைடஸ் லைஃப்சயின்சஸ் பங்கின் இலக்கு ரூ.1,240-லிருந்து ரூ.1,280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், நைகா, பாலாஜி அமின்ஸ் பங்குகளுக்கு விற்பனை பரிந்துரையும், பாட்டா இந்தியா, பிரின்ஸ் பைப்ஸ் பங்குகளுக்கு முதலீட்டைக் குறைக்கும் பரிந்துரையும் தொடர்கின்றன.

முந்தைய செய்தி
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த செய்தி
LIC இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 20% உயர்வு

தொடர்புடைய செய்திகள்