Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.2,000-ஐ நெருங்கிய அதானி போர்ட்ஸ் பங்கு

ரூ.2,000-ஐ நெருங்கிய அதானி போர்ட்ஸ் பங்கு

இதுவரை பங்கு விலை 31 சதவீதம் உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சந்தை எதிர்பார்ப்பை விஞ்சிய இரண்டாம் காலாண்டு முடிவுகளை அக்டோபர் 28-ல் வெளியிட்டதிலிருந்து, அதானி போர்ட்ஸ் பங்கு சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

 ரூ.1,961.85 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட இப்பங்கு, திங்கள்கிழமை காலை மும்பை பங்குச் சந்தையில் சுமார் ஒரு சதவீதம் சரிந்து ரூ.1,933-ல் வர்த்தகமானது. நடப்பாண்டில் இதுவரை பங்கு விலை 31 சதவீதம் உயர்ந்துள்ளது.

செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், சரக்குக் கையாளுதல் 15 சதவீதம் அதிகரித்து 14.2 கோடி டன்னாக உயர்ந்தது. செயல்பாட்டு வருவாய் 23.7 சதவீதம் அதிகரித்து ரூ.11,340 கோடியானது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் கணிப்பை நிறுவனம் ரூ.44,000 முதல் ரூ.46,000 கோடி வரை உயர்த்தியுள்ளது.

 
இப்பங்குக்கு ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ரூ.2,210-ஐயும், ஜேஎம் பைனான்ஷியல் ரூ.2,065-ஐயும் இலக்கு விலையாக நிர்ணயித்துள்ளன. எலாரா கேபிடல் தனது முந்தைய இலக்கு விலையான ரூ.2,107-ஐ ரூ.2,432 ஆக உயர்த்தியுள்ளது. மூன்று தரகு நிறுவனங்களும் பங்கை வாங்கப் பரிந்துரைத்துள்ளன.

முந்தைய செய்தி
300 டன் தங்கத்தை மின்னணு ரசீதுகளாக மாற்ற என்எஸ்இ இலக்கு
அடுத்த செய்தி
ஜூபிலன்ட் பங்கு 5 சதவீதம் சரிவு - இலக்கு விலையைக் குறைத்த சிஎல்எஸ்ஏ

தொடர்புடைய செய்திகள்