Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிஇஎல் பங்கு 42% உயர வாய்ப்பு - மோதிலால் ஓஸ்வால் கணிப்பு

பிஇஎல் பங்கு 42% உயர வாய்ப்பு - மோதிலால் ஓஸ்வால் கணிப்பு

பங்கின் இலக்கு விலையை ரூ.530-லிருந்து ரூ.540 ஆக உயர்த்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பொதுத்துறை பாதுகாப்புத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) பங்கு விலை மேலும் 42 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

பிஇஎல் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் எதிர்பார்ப்பைவிட சிறப்பாக அமைந்துள்ளன. இதையடுத்து, இந்நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என்ற பரிந்துரையை மோதிலால் ஓஸ்வால் தக்கவைத்துள்ளது. பங்கின் இலக்கு விலையை ரூ.530-லிருந்து ரூ.540 ஆக உயர்த்தியுள்ளது.


இதன் எதிரொலியாக நேற்று (நவ.4) பிஇஎல் பங்குகள் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 3 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன. மற்றொரு தரகு நிறுவனமான நோமுராவும் பங்குகளை வாங்கப் பரிந்துரைத்து, இலக்கு விலையாக ரூ.530 நிர்ணயித்துள்ளது.


பிஇஎல் நிறுவனத்தின் வருவாய், செயல்பாட்டு லாபம், நிகர லாபம் ஆகியவை மதிப்பீடுகளை விஞ்சியுள்ளன. 2026 முதல் 2029 வரையிலான நிதியாண்டுகளில் வருவாயும் நிகர லாபமும் ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் வளருமென எதிர்பார்க்கப்படுகிறது.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.2,200 கோடியும், மூலதனச் செலவுக்கு ரூ.1,200 கோடியும் ஒதுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், புதிய ஆர்டர்கள் 31 சதவீதம் குறைந்துள்ளன. ரூ.30,000 கோடி மதிப்பிலான கியூஆர்எஸ்ஏஎம் திட்டமும், ரூ.20,000 கோடி மதிப்பிலான போர்க்கப்பல் ஆர்டரும் எதிர்பார்க்கப்படுகின்றன.


பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் தாமதம், போட்டி அதிகரிப்பு, மூலப்பொருள் விலையேற்றம் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன.

முந்தைய செய்தி
கரும்பு டன்னுக்கு ரூ.710 ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்
அடுத்த செய்தி
பிரபல முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்த 2 பங்குகள் கடும் சரிவு

தொடர்புடைய செய்திகள்