Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விலை சரிவிலும் தங்கம் வாங்கிய சீனா - என்ன காரணம்?

விலை சரிவிலும் தங்கம் வாங்கிய சீனா - என்ன காரணம்?

நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் சுமார் 129 டன் தங்கம் அதன் கையிருப்பில் சேர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அக்டோபரில் சர்வதேசத் தங்க விலை ஏறக்குறைய 7 சதவீதம் சரிந்த நிலையில், சீன மத்திய வங்கி 25.8 டன் தங்கத்தை வாங்கியது. இதன் மூலம் தொடர்ந்து 24 மாதங்களாகத் தங்கக் கையிருப்பை உயர்த்தியுள்ளது.

சீன மத்திய வங்கியின் தங்கக் கையிருப்பு அக்டோபரில் 8.30 லட்சம் அவுன்ஸ் அதிகரித்ததாக நேற்று வெளியான அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் விலை சரிந்தபோது தங்கம் வாங்கும் அளவை வங்கி அதிகரித்தது. நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் சுமார் 129 டன் தங்கம் அதன் கையிருப்பில் சேர்ந்துள்ளது.


உலக தங்க கவுன்சில் தரவின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் கொள்முதல் விவரங்களை வெளியிட்ட மத்திய வங்கிகளில் சீனா முதலிடம் பிடித்தது. அந்தக் காலாண்டில் உலகளவில் அதிகாரப்பூர்வ அமைப்புகளின் நிகரத் தங்கக் கொள்முதல் 321 டன்னாக இருந்தது. இது 2024-ம் ஆண்டின் கடைசிக் காலாண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச அளவு. மந்தமான தங்கச் சந்தையில் மத்திய வங்கிகளின் கொள்முதல் தங்க விலைக்கு ஆதரவாக உள்ளது.


அக்டோபரில் ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்த தங்க விலை, மாத இறுதியில் அவுன்ஸுக்கு 4,000 டாலருக்கும் கீழே முடிந்தது. 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் பதிவான மிகப் பெரிய சரிவு இது. அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு விலை மீண்டாலும், பிப்ரவரி இறுதியில் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.


எரிசக்தி விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து, பணக் கொள்கை இறுக்கமடைந்துள்ளது. இது வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பைக் குறைக்கிறது. அதேவேளையில், சீன மத்திய வங்கியின் கொள்முதல் நீண்ட காலத்தில் விலையைத் தாங்கும் என்ற எதிர்பார்ப்பில், சீனாவில் பலர் அக்டோபரில் அவுன்ஸுக்குச் சுமார் 4,000 டாலர் விலையில் தங்கம் வாங்கினர்.

முந்தைய செய்தி
NSE தளத்தில் ரூ.33.11 கோடி வர்த்தகம்
அடுத்த செய்தி
தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தையொட்டி 16% வரை உயர வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்