Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐஐஎஃப்எல் கேபிடல் நிறுவனத்தின் 11.22% பங்குகளை வாங்கிய ஃபேர்ஃபாக்ஸ்

ஐஐஎஃப்எல் கேபிடல் நிறுவனத்தின் 11.22% பங்குகளை வாங்கிய ஃபேர்ஃபாக்ஸ்

ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்கு 26.82 சதவீதத்திலிருந்து 38.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது துணை நிறுவனமான எஃப்ஐஎச்எம் மொரீஷியஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலம், ஐஐஎஃப்எல் கேபிடல் நிறுவனத்தில் கூடுதலாக 11.22 சதவீதப் பங்குகளை ரூ.2,000 கோடிக்கு வாங்கியுள்ளது.


இதற்காக, நவ.4-ம் தேதி ஒரு பங்கு ரூ.350 என்ற விலையில் 5.71 கோடி பங்குகளை எஃப்ஐஎச்எம் நிறுவனத்துக்கு ஐஐஎஃப்எல் கேபிடல் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், அந்நிறுவனத்தில் ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்கு 26.82 சதவீதத்திலிருந்து 38.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தப் பங்குகள் வாங்குவதற்கான பொது அறிவிப்பு நடவடிக்கை நிறைவடையும் வரை, புதிதாக ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு வாக்குரிமை இருக்காது. செபி விதிமுறைகளின்படி, அவை தனி பங்கு எஸ்க்ரோ கணக்கில் வைக்கப்படும் என ஐஐஎஃப்எல் கேபிடல் தெரிவித்துள்ளது. 


ஐஐஎஃப்எல் கேபிடல் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்குவதற்கான ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திட்டத்துக்கு, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்தது.

மொரீஷியஸைச் சேர்ந்த எஃப்ஐஎச்எம் நிறுவனம், இந்தியாவில் பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால மூலதன வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

 இந்நிறுவனம் முழுமையாக ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் டொராண்டோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் தாய் நிறுவனமான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ், கனடாவைச் சேர்ந்த காப்பீடு, மறுகாப்பீடு மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனமாகும்.

முந்தைய செய்தி
Engineer’s air travel cancelled after GPS device found in baggage
அடுத்த செய்தி
Rush increases railway station ahead of Deepavali

தொடர்புடைய செய்திகள்