Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோத்ரெஜ் அக்ரோவெட் Q2 நிகர லாபம் 22% உயர்வு

கோத்ரெஜ் அக்ரோவெட்  Q2 நிகர லாபம் 22% உயர்வு

காலாண்டுக்கான வரிக்கு முந்தைய லாபம் (பிபிடி) 5 சதவீதம் உயர்ந்து ரூ.131 கோடியாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.103 கோடியாக அதிகரித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு மற்றும் முதல் அரையாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.2,995 கோடியாக உயர்ந்துள்ளது.


 அதேபோல, காலாண்டுக்கான வரிக்கு முந்தைய லாபம் (பிபிடி) 5 சதவீதம் உயர்ந்து ரூ.131 கோடியாக உள்ளது. அதேநேரத்தில், வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை செலுத்துவதற்கு முந்தைய வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ.222 கோடியாகவே நீடித்துள்ளது.
கால்நடைத் தீவனப் பிரிவு, பாமாயில் மற்றும் நுகர்வோர் உணவுப் பொருள்கள் பிரிவுகளின் சிறப்பான செயல்பாடு வருவாய் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

எனினும், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் எல் நினோ பருவநிலை தாக்கம் காரணமாக லாப விகிதத்தில் 1.20 சதவீதப் புள்ளிகள் சரிவு ஏற்பட்டது.பயிர் பாதுகாப்பு, பால் பொருள்கள் மற்றும் ஆஸ்டெக் பிரிவுகளில் ஏற்பட்ட லாபச் சரிவை கால்நடைத் தீவனப் பிரிவின் சிறப்பான செயல்பாடு ஓரளவு ஈடுகட்டியது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.5,847 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், இதே காலகட்டத்தில் எபிட்டா 5 சதவீதமும், வரிக்கு முந்தைய லாபம் 4 சதவீதமும், நிகர லாபம் 1 சதவீதமும் சரிவடைந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சுனில் கட்டாரியா கூறும்போது, "எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட பருவநிலை பாதிப்புகள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க அழுத்தங்கள் இருந்தபோதிலும், இரண்டாவது காலாண்டில் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


கால்நடைத் தீவனப் பிரிவின் வருவாய் 14 சதவீதம், பாமாயில் பிரிவின் வருவாய் 28 சதவீதம் அதிகரித்துள்ளன. கால்நடைத் தீவனப் பிரிவின் லாபம் 32 சதவீதம் உயர்ந்துள்ளது. பயிர் பாதுகாப்புப் பிரிவின் வருவாய் 42 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பால் பொருள்கள் பிரிவு 6 சதவீதமும், உணவுப் பொருள்கள் பிரிவு 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளன" என்றார்.

முந்தைய செய்தி
ஐ.நா. அமைதிப்படை தொடர்ந்து செயல்பட லெபனான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி
திருமங்கலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை

தொடர்புடைய செய்திகள்