Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

6% உயர்வுடன் அறிமுகமான நகை பங்கு

6% உயர்வுடன் அறிமுகமான நகை பங்கு

ரூ.275 கோடி ஐபிஓவுக்கு 5.09 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

பகிரவும் WhatsApp Facebook

எம்.கே. சன்ஸ் ஃபைன் ஜுவல்ஸ் நிறுவனப் பங்குகள் நேற்று பங்குச் சந்தையில் 6% பிரீமியத்தில் அறிமுகமாகின. இருப்பினும், தொடக்கத்தில் கிடைத்த ஏற்றத்தைத் தக்கவைக்க முடியவில்லை.

ரூ.162 வெளியீட்டு விலை கொண்ட இப்பங்கு, மும்பை பங்குச் சந்தையில் ரூ.171.60-க்கு அறிமுகமானது. வர்த்தகத்தின்போது ரூ.174.90 வரை உயர்ந்த பங்கு, இறுதியில் ரூ.162.20-ல் நிலைபெற்றது. இது 0.12% உயர்வாகும்.


தேசிய பங்குச் சந்தையிலும் இதே விலையில் முடிவடைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.913.04 கோடியாக உள்ளது.
ரூ.275 கோடி ஐபிஓவுக்கு 5.09 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 

திரட்டப்பட்ட நிதி, மகாராஷ்டிராவில் புதிய நகைக்கடை திறக்கவும், குஜராத்தில் உள்ள கடையை விரிவுபடுத்தவும், கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தப்படும். இந்நிறுவனம் மும்பை, அகமதாபாத்தில் 5 நகைக்கடைகளை நடத்துகிறது.

முந்தைய செய்தி
இஸ்ரேலில் கூட்டணி பேரம் தீவிரம் - ஆட்சி அமைப்பதில் இழுபறி
அடுத்த செய்தி
கரும்பு டன்னுக்கு ரூ.710 ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

தொடர்புடைய செய்திகள்