Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

5 துறைகளில் 35 பங்குகள் ஜேபி மோர்கன் பரிந்துரை

5 துறைகளில் 35 பங்குகள் ஜேபி மோர்கன் பரிந்துரை

5 துறைகளில் சாதகமான முதலீட்டு நிலைப்பாட்டை ஜேபி மோர்கன் கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பங்குச்சந்தையில் நிதி, தொழில்துறை உள்ளிட்ட 5 துறைகளைச் சேர்ந்த 35 பங்குகளில் முதலீடு செய்ய சர்வதேச தரகு நிறுவனமான ஜேபி மோர்கன் பரிந்துரைத்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் உள்ளிட்ட பங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நிதிச் சேவைகள், தொழில்துறை, நுகர்வோர் விருப்பப் பொருள்கள், சுகாதாரம், மூலப்பொருள்கள் ஆகிய 5 துறைகளில் சாதகமான முதலீட்டு நிலைப்பாட்டை ஜேபி மோர்கன் கொண்டுள்ளது.


அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 11 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு, பணவீக்கம் குறைந்து நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


நடப்புக் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் லாப வளர்ச்சி 20 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், செயற்கை நுண்ணறிவால் தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய வருவாயில் சுமார் 80 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஜேபி மோர்கன் எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி
12% உயர்வுடன் பட்டியலான Bombay Coated பங்குகள்
அடுத்த செய்தி
முதலீட்டாளர் பங்கு மதிப்பு ரூ.8 லட்சம் கோடி உயர்வு

தொடர்புடைய செய்திகள்