Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

என்பிசிசி பங்கு இலக்கு ரூ.120-ஆக குறைப்பு

என்பிசிசி பங்கு இலக்கு ரூ.120-ஆக குறைப்பு

ரூ.8,000 முதல் ரூ.10,000 கோடி மதிப்பிலான குடியிருப்புகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

என்பிசிசி பங்கின் இலக்கு விலையை ரூ.133-லிருந்து ரூ.120 ஆக நுவாமா தரகு நிறுவனம் குறைத்துள்ளது. ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று நிதி திரட்டுவதில் தொடரும் தாமதத்தால், பங்குக்கான இலக்கு விலை–வருவாய் விகிதத்தை 45 மடங்கிலிருந்து 35 மடங்காகக் குறைத்துள்ளது. எனினும், ‘வாங்கலாம்’ என்ற பரிந்துரையைத் தொடர்கிறது.

ஆப்பிரிக்கா அவென்யூ திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளையும் என்பிசிசி ரூ.5,200 கோடிக்கு விற்றுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விநாயக் மந்திர் மார்க், சிந்தியா மார்க் திட்டங்களில் ரூ.8,000 முதல் ரூ.10,000 கோடி மதிப்பிலான குடியிருப்புகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.


ஜெய்ப்பூரில் இரு நிலப் பகுதிகளை ரூ.430 கோடிக்கு விற்றுள்ள நிறுவனம், மீரட், காஜியாபாத்தில் தலா ஒரு நிலப் பகுதியை நான்காம் காலாண்டில் விற்க எதிர்பார்க்கிறது. 

குருகிராம் செக்டார் 37டி குடியிருப்புத் திட்டம் அதே காலாண்டிலும், கித்தோர்னி திட்டம் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடங்கப்படும் என நுவாமா தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
ஜூபிலன்ட் பங்கு 5 சதவீதம் சரிவு - இலக்கு விலையைக் குறைத்த சிஎல்எஸ்ஏ
அடுத்த செய்தி
சாய் லைப் சயின்சஸ் பங்கு 3 நாட்களில் 19% உயர்வு

தொடர்புடைய செய்திகள்