Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டைட்டன் துணைத் தலைவர் பதவி - நவ. 12-ல் நோயல் டாடா ஓய்வு

டைட்டன் துணைத் தலைவர் பதவி - நவ. 12-ல் நோயல் டாடா ஓய்வு

நவம்பர் 12 முதல் அவரது ஓய்வு அமலுக்கு வரும் என நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நகை மற்றும் கைக்கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவர், இயக்குநர் ஆகிய பதவிகளிலிருந்து நோயல் டாடா நவம்பர் 12-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் அவருக்கு 70 வயது நிறைவடைகிறது.

டாடா குழுமத்தின் நிர்வாக வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டைட்டன் நிறுவனம் பங்குச் சந்தைகளுக்கு தெரிவித்துள்ளது. டைட்டன் இயக்குநர் குழுவில், அன்றாட நிர்வாகப் பொறுப்பில்லாத இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார். 


நவம்பர் 12 முதல் அவரது ஓய்வு அமலுக்கு வரும் என நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதே நிர்வாக வழிகாட்டுதலின்படி, டிரென்ட், வோல்டாஸ், டாடா ஸ்டீல், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், டாடா இன்டர்நேஷனல் உள்ளிட்ட குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களிலிருந்து அவர் ஏற்கெனவே விலகியுள்ளார். 

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸில் மிகப் பெரிய பங்குதாரராக உள்ள டாடா அறக்கட்டளைகளின் தலைவராகவும் நோயல் டாடா பொறுப்பு வகிக்கிறார்.

முந்தைய செய்தி
சீமென்ஸ் நிகர லாபம் ரூ.504 கோடி
அடுத்த செய்தி
மகாராஷ்டிர மின் நிறுவன பங்கு வெளியீடு

தொடர்புடைய செய்திகள்