Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த என்எஸ்இ திட்டம்

ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த என்எஸ்இ திட்டம்

இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், கணினி செயலாக்கத் திறனை 224 ஜிபியூக்களாக விரிவுபடுத்த தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தனது தரவு மையத்தில் கணினி சிப்களை நேரடியாகக் குளிர்விக்கும் திரவக் குளிரூட்டும் தொழில்நுட்பத்தை என்எஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மூலதனச் சந்தையில் இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஏற்கெனவே பல ஜிபியூக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், நடப்பு காலாண்டில் அவற்றின் எண்ணிக்கையை 80-க்கும் அதிகமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத் தேவைகளுக்கேற்ப 224 ஜிபியூக்கள் வரை பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஏஐ பயன்பாடுகள் அதிகரிப்பதால் கணினிகளின் மின்சாரத் தேவையும், வெப்பமும் உயர்கின்றன. புதிய திரவக் குளிரூட்டும் தொழில்நுட்பம் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, ஆற்றல் பயன்பாட்டைச் சிக்கனமாக்க உதவும்.
மேலும், தரவுகளையும் கணினி வளங்களையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தகவல் பாதுகாப்பையும், ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்குவதையும் உறுதிப்படுத்த முடியும்.


இதுகுறித்து என்எஸ்இ செயல் இயக்குநர் விரால் மோடி கூறுகையில், தொழில்நுட்ப முதலீடுகள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தவும் உதவும் என்றார்.
தலைமை தொழில்நுட்ப அதிகாரி சம்பத் மாணிக்கம் கூறுகையில், அதிக கணினித் திறன் தேவைப்படும் ஏஐ பயன்பாடுகளுக்கு இந்தக் கட்டமைப்பு உறுதுணையாக இருக்கும் என்றார்.


சந்தைப் பங்கேற்பாளர்களின் தேவைக்கேற்ப, பங்குச் சந்தையின் இணை இருப்பிடத் தரவு மையத்துக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த என்எஸ்இ திட்டமிட்டுள்ளது.

முந்தைய செய்தி
பிரதான பங்குச் சந்தைகளுக்கு மாறிய பிரைட் அவுட்டோர் மீடியா
அடுத்த செய்தி
300 டன் தங்கத்தை மின்னணு ரசீதுகளாக மாற்ற என்எஸ்இ இலக்கு

தொடர்புடைய செய்திகள்