Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Sagar Defence உள்ளிட்ட 4 நிறுவனங்களின் IPO-க்கு SEBI ஒப்புதல்

Sagar Defence உள்ளிட்ட 4 நிறுவனங்களின் IPO-க்கு SEBI ஒப்புதல்

பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சாகர் டிஃபென்ஸ் இன்ஜினீயரிங், ரகசிய முன்தாக்கல் முறையில் வரைவு ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

சாகர் டிஃபென்ஸ் இன்ஜினீயரிங், என்கியூப் எத்திக்கல்ஸ், அர்ஜுன் ஜுவல்லர்ஸ், ஐஎஃப்எல் ஃபைனான்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் முதல் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்ள இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் 1 வரையிலான காலத்தில் வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்தன. அவற்றைப் பரிசீலித்த செபி, அக்டோபர் 21 முதல் நவம்பர் 4 வரையிலான காலத்தில் தனது இறுதிக் கருத்துகளை வழங்கியது. இதன் மூலம் நான்கு நிறுவனங்களும் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான அடுத்த கட்டப் பணிகளை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சாகர் டிஃபென்ஸ் இன்ஜினீயரிங், ரகசிய முன்தாக்கல் முறையில் வரைவு ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தது. இந்நிறுவனத்துக்கு நவம்பர் 4 அன்று செபி ஒப்புதல் கிடைத்தது. இதன் ஐபிஓ மதிப்பு சுமார் ரூ.3,000 கோடியாக இருக்கும் என விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான என்கியூப் எத்திக்கல்ஸின் ரூ.3,000 கோடி ஐபிஓ முழுவதும் ஏற்கெனவே உள்ள பங்குகளின் விற்பனையாக அமையும். நிறுவன மேம்பாட்டாளர் மெஹுல் மதுசூதன் ஷா மற்றும் ஃபிரான்டியர் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் தங்களது பங்குகளை விற்கவுள்ளனர். விற்பனைத் தொகை முழுவதும் இவர்களுக்குச் செல்லும்.

நகை விற்பனை நிறுவனமான அர்ஜுன் ஜுவல்லர்ஸுக்கும் நவம்பர் 4 அன்று ஒப்புதல் கிடைத்தது. அதன் ஐபிஓ முழுவதும் ரூ.200 கோடி மதிப்பிலான புதிய பங்குகளைக் கொண்டிருக்கும். வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகை நிறுவனத்துக்குச் செல்லும்.

புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎஃப்எல் ஃபைனான்ஸ், தங்க நகைக் கடனில் கவனம் செலுத்தும் வங்கிசாரா நிதி நிறுவனம். அதன் ஐபிஓவில் அதிகபட்சம் 3.55 கோடி புதிய பங்குகள் வெளியிடப்படும். ஏற்கெனவே உள்ள பங்குதாரர்கள் அதிகபட்சம் 30 லட்சம் பங்குகளை விற்பனை செய்வார்கள். 

புதிய பங்குகள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு முதல்நிலை மூலதனத்தை வலுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடன் வழங்கும் பணிகளுக்கான எதிர்கால மூலதனத் தேவைகளை நிறைவேற்றவும், மூலதனப் போதுமான அளவு தொடர்பான விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.

பொதுப் பங்கு வெளியீடுகள் முடிந்த பிறகு, நான்கு நிறுவனங்களின் பங்குகளும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்படும்.

முந்தைய செய்தி
லாபம் உயர்ந்தும் Thermax பங்கு கடும் சரிவு
அடுத்த செய்தி
NSE தளத்தில் ரூ.33.11 கோடி வர்த்தகம்

தொடர்புடைய செய்திகள்