Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெரிதாக மாற்றமின்றி முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

பெரிதாக மாற்றமின்றி முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் ஏற்ற இறக்கத்துடன், பெரிதாக மாற்றமின்றி முடிவடைந்தன.

பகிரவும் WhatsApp Facebook

வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் லாப நோக்கிலான விற்பனை, உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவு குறித்த எச்சரிக்கை ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் ஏற்ற இறக்கத்துடன், பெரிதாக மாற்றமின்றி முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் 30 நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 8.08 புள்ளிகள் சரிந்து 73,598.67-இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73,762.98-ஐயும், குறைந்தபட்சமாக 73,179.41-ஐயும் தொட்டது. சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் உயர்ந்தன. 12 பங்குகள் சரிந்தன. ஒரு பங்கு மாற்றமின்றி இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3.45 புள்ளிகள் குறைந்து 22,749.75-இல் நிலைபெற்றது.


முன்னணி குறியீடுகள் நிலையாக முடிந்தபோதிலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் வலுவான வாங்குதல் காணப்பட்டது. பிஎஸ்இ ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 2.59 சதவீதமும், மிட்கேப் செலக்ட் குறியீடு 0.88 சதவீதமும் உயர்ந்தன.
சென்செக்ஸ் நிறுவனங்களில் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை முக்கிய இழப்பாளர்களாக இருந்தன. பார்தி ஏர்டெல், டிரெண்ட், மாருதி, பவர் கிரிட் பங்குகள் உயர்ந்தன.


துறைவாரியாக, சுகாதாரக் குறியீடு 2.28 சதவீதம், தொலைத்தொடர்பு 2.15 சதவீதம், ரியல் எஸ்டேட் 1.64 சதவீதம், வாகனத் துறை 1.62 சதவீதம் உயர்ந்தன. முன்னணி 10 வங்கிகளின் குறியீடு 0.99 சதவீதம் சரிந்தது.
சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115.8 டாலராக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,462.49 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க பெடரல் ரிசர்வின் புதன்கிழமை கொள்கை முடிவும், எதிர்கால வட்டி விகிதங்கள் குறித்த அதன் நிலைப்பாடும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வெளிநாட்டுக் காரணிகளின் அழுத்தம் தணிவதும், பரவலான பங்கு வாங்குதல் தொடர்வதும் சந்தை மீட்சிக்கு முக்கியமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆசியாவில் தென் கொரியா, ஜப்பான் சந்தைகள் உயர்ந்தன; சீனா, ஹாங்காங் சந்தைகள் சரிந்தன. திங்கள்கிழமை சென்செக்ஸ் 482.92 புள்ளிகளும், நிஃப்டி 153.20 புள்ளிகளும் உயர்ந்திருந்தன.

முந்தைய செய்தி
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
அடுத்த செய்தி
63% வரை உயர வாய்ப்புள்ள பங்குகள் எவை? - ஜெஃப்ரீஸ் பரிந்துரை

தொடர்புடைய செய்திகள்