Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்வோடெக் நிகர லாபம் ரூ.9.74 கோடியாக உயர்வு

சர்வோடெக் நிகர லாபம் ரூ.9.74 கோடியாக உயர்வு

ரூ.39.51 லட்சமாக இருந்த நிகர லாபம், தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சர்வோடெக் ரினீவபிள் பவர் சிஸ்டம் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.9.74 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.39.51 லட்சமாக இருந்த நிகர லாபம், தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.


நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.82 சதவீதம் உயர்ந்து ரூ.168.82 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வருவாய் ரூ.107.65 கோடியாக இருந்தது.


நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமன் பாட்டியா கூறும்போது, “இந்த காலாண்டில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொள்வதில் கவனம் செலுத்தினோம்” என்றார். 

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை வழங்கும் இந்நிறுவனம், தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
‘EvoS’ நிறுவனத்தை ரூ.26,000 கோடிக்கு கைப்பற்றும் Adani Ports
அடுத்த செய்தி
Arunachaleshwar temple nets Rs 5.06 cr cash, 160 grams gold in offerings

தொடர்புடைய செய்திகள்