Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பட்ஜெட் பேச்சு தோல்வி; பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா

பட்ஜெட் பேச்சு தோல்வி; பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா

பிரதமரின் என்விஏ கட்சியும், எம்ஆர்கட்சியும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செலவுகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்துகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

பெல்ஜியத்தில் பட்ஜெட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பார்ட் டி வெவர் ராஜினாமா கடிதம் அளித்தார். அதை ஏற்பது குறித்த முடிவை மன்னர் பிலிப் ஒத்திவைத்துள்ளார்.

ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனைகளைத் தொடங்கும் மன்னர், வெள்ளிக்கிழமை பிரதமரை மீண்டும் சந்திக்கவுள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது. நாட்டின் நிதிநிலையைச் சீராக்க, செலவுக் குறைப்பு மற்றும் வரி உயர்வால் 1,000 கோடி யூரோ திரட்ட ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டணி முயன்றது. ஆனால், இது குறித்து கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படவில்லை.

பிரதமரின் என்விஏ கட்சியும், எம்ஆர்கட்சியும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செலவுகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்துகின்றன. சோசலிச மற்றும் மையவாத கூட்டணி கட்சிகள் செல்வத்தின் மீதான வரிகளை அதிகரிக்க விரும்புகின்றன. புவிசார் அரசியல் நிச்சயமின்மை, பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நீடித்த அரசியல் நெருக்கடியை நாடு தாங்க முடியாது என மன்னர் தெரிவித்துள்ளார். பொதுநலனுக்கு முன்னுரிமை அளித்து சமரசம் காணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யூரோஸ்டாட் தரவுப்படி, 2025-ல் பெல்ஜியத்தின் பட்ஜெட் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகவும், அரசுக் கடன் 108.1 சதவீதமாகவும் இருந்தன. இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரம்புகளைவிட அதிகம். தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் நம்பகமான பட்ஜெட்டில் உடன்பாடு எட்டப்படாதது வருத்தமளிப்பதாக அரண்மனை கூறியது. ஒன்றியத்தின் பற்றாக்குறை வரம்பு 3 சதவீதம். கடன் வரம்பு 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
Festive calendar mismatch hits auto retail sales in October
அடுத்த செய்தி
Indian companies trust AI with greater autonomy

தொடர்புடைய செய்திகள்