Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஒரே நாளில் ரூ.217.12 லட்சம் கோடி இழப்பு - ஏஐ பங்குகள் சரிவு

ஒரே நாளில் ரூ.217.12 லட்சம் கோடி இழப்பு -  ஏஐ பங்குகள் சரிவு

சிப் பங்குகளுக்கும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அடி விழுந்தது.

பகிரவும் WhatsApp Facebook

ஏஐ தரவு மையங்களுக்குக் கட்டுப்பாடு வரலாம் என்ற அச்சம் அமெரிக்க பங்குச் சந்தைகளை உலுக்கியதில், நாஸ்டாக் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 2.3 டிரில்லியன் டாலர் (ரூ.217.12 லட்சம் கோடி) கரைந்தது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு புதன்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்ந்தன. ஆனால், மறுநாளே முதலீட்டாளர்கள் போட்டிபோட்டு பங்குகளை விற்பனை செய்ததால், அந்த லாபம் முழுவதையும் பங்குச் சந்தைகள் இழக்க நேர்ந்தது. டெக்சாஸ், ஜார்ஜியாவில் புதிய தரவு மையங்களுக்குத் தற்காலிகத் தடை கோரிய வேட்பாளர்கள் வென்றதால், ஏஐ கட்டமைப்புத் திட்டங்கள் தாமதமாகலாம் என்ற அச்சம் வலுத்ததால் தொழில்நுட்பப் பங்குகளில் விற்பனையைத் தூண்டியது.

 
நவம்பர் 5 வர்த்தகத்தில் நாஸ்டாக் 100 குறியீடு 6.4% சரிந்தது. அதில் இடம்பெற்ற நிறுவனங்களின் மொத்தச் சந்தை மதிப்பு 2.3 டிரில்லியன் டாலர் (ரூ.217.12 லட்சம் கோடி) குறைந்தது.
விற்பனையின் மையத்தில் சிப் தயாரிப்பாளர்கள் இருந்தனர். என்விடியா பங்கு 9.3% சரிந்தது. ஏஎம்டி 17.3%, மைக்ரான் 17.5% வீழ்ந்தன. மைக்ரோசாஃப்ட் 3.6%, அமேசான் 2.2%, ஆப்பிள் 1.53% சரிந்தன. என்விடியா, டெஸ்லா, மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஆல்ஃபபெட், அமேசான், மெட்டா ஆகிய ‘மேக்னிஃபிசென்ட் செவன்’ நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு இழப்பு 1.006 டிரில்லியன் டாலர் (ரூ.94.97 லட்சம் கோடி) என மதிப்பிட்டுள்ளது.

 
நவம்பர் 3 இடைக்காலத் தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றது. தேர்தலுக்குப் பிறகு சில பகுதிகளில் புதிய தரவு மையத் திட்டங்கள் தாமதமாகலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்ற கவலை எழுந்தது. திட்டங்கள் தள்ளிப்போனால், அவற்றுக்குத் தேவையான சிப்கள், சர்வர்கள், மின் உபகரணங்களுக்கான தேவையும் எதிர்பார்த்த வேகத்தில் வளராமல் போகலாம்.

 
உலகத் தரவு மையங்களின் மின்சாரப் பயன்பாடு 2025-ல் 485 டெராவாட் மணியாக இருந்தது. அது 2030-ல் சுமார் 950 டெராவாட் மணியாக உயரும் என்று சர்வதேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. இதற்கிடையே, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், 2026-க்கான தனது மொத்த மூலதனச் செலவு 195–205 பில்லியன் டாலராக (ரூ.18.41–19.35 லட்சம் கோடி) இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கட்டமைப்பில் முதலீடு அதிகரிக்கும்போது, மின்சாரம் உள்ளிட்ட தரவு மைய இயக்கச் செலவுகளும் உயரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஐ பங்குகளை புரட்டிப்போட்ட வியாழன்


நாஸ்டாக் 100 குறியீடு நவம்பர் 5 அன்று 6.4% சரிந்தது. கொரோனா பெருந்தொற்றால் உலகச் சந்தைகள் அதிர்ந்த 2020 மார்ச்சுக்குப் பிறகு, இந்தக் குறியீடு சந்தித்த மிகப் பெரிய ஒருநாள் வீழ்ச்சி இது. சிப் பங்குகளுக்கும் ஆறு ஆண்டுகளில் இல்லாத அடி விழுந்தது.

 
பிலடெல்பியா செமிகண்டக்டர் குறியீடு 12% வீழ்ந்தது. என்விடியா முதல் வால்மார்ட் வரை விற்பனை பரவியது. எஸ் அண்ட் பி 500 குறியீட்டின் 11 துறைகளும் சரிந்தன. டவ் ஜோன்ஸில் இடம்பெற்ற 30 நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ந்தன. பெருந்தொற்றின் தொடக்கத்தில் பொருளாதார முடக்கம் சந்தையை உலுக்கியது. இம்முறை, புதிய ஏஐ தரவு மையங்களுக்குக் கட்டுப்பாடுகள் வரலாம் என்ற அச்சம் விற்பனையைத் தூண்டியது. பரந்த எஸ் அண்ட் பி 500 குறியீட்டுக்கு இது ஏப்ரல் 2025-க்குப் பிறகான மிகப் பெரிய ஒருநாள் சரிவு.

விற்பனை அலையில் வீழ்ந்த 5 ஜாம்பவான்கள்
• மைக்ரான் ↓ 17.5%
• ஏஎம்டி ↓ 17.3%
• என்விடியா ↓ 9.3%
• மைக்ரோசாஃப்ட் ↓ 3.6%
• அமேசான் ↓ 2.2%
ஆதாரம் — சிபோ (Cboe Global Markets) சந்தை அறிக்கை

முந்தைய செய்தி
ஜப்பான் புகையிலை நிறுவன சொத்துகளை கைப்பற்றியது ரஷ்யா
அடுத்த செய்தி
டிஜிட்டல் வங்கி வீழ்ச்சி - பராகுவே அதிபர் பதவி விலகல்

தொடர்புடைய செய்திகள்