Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டிஜிட்டல் வங்கி வீழ்ச்சி - பராகுவே அதிபர் பதவி விலகல்

டிஜிட்டல் வங்கி வீழ்ச்சி - பராகுவே அதிபர் பதவி விலகல்

பதவி நீக்க நடவடிக்கை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு விலகினார்.

பகிரவும் WhatsApp Facebook

யுவெனோ டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் நிதி நெருக்கடியும் போராட்டங்களும் வெடித்ததைத் தொடர்ந்து, பராகுவே அதிபர் சாண்டியாகோ பென்யா பதவி விலகினார். ஆளும் கொலராடோ கட்சியின் ஆதரவை இழந்த அவர், பதவி நீக்க நடவடிக்கை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு விலகினார்.

குறைந்தபட்ச நிதி தகுதி விதிகளை யுவெனோ மீறியதாகக் கூறி மத்திய வங்கி தலையிட்டது. இதையடுத்து, சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கியின் கணக்குகள் முடங்கின. கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எட்டு வங்கி நிர்வாகிகளும் சரணடைந்தனர்.


ஓய்வூதிய நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், வங்கியைக் கண்காணிப்பிலிருந்து பாதுகாக்க பென்யா உதவியதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். குற்றச்சாட்டுகளை மறுத்த பென்யா, செனட் விசாரணையில் விளக்கமளிக்கப் போவதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைப் பெற விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ஒரே நாளில் ரூ.217.12 லட்சம் கோடி இழப்பு - ஏஐ பங்குகள் சரிவு
அடுத்த செய்தி
பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலப்பு; ஆய்வில் வெளிவந்த தகவல்

தொடர்புடைய செய்திகள்