Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலப்பு; ஆய்வில் வெளிவந்த தகவல்

பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலப்பு; ஆய்வில் வெளிவந்த தகவல்

இந்தியன் ஆயில் பெட்ரோலில் 31.2 சதவீதம் அளவிற்கும், HPCL பெட்ரோலில் 3.5 சதவீதம் அளவிற்கும் எத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

மத்திய அரசு நிர்ணயித்த அளவைவிட பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் மத்திய அரசு முன்மொழிந்த E20 பெட்ரோல் (பெட்ரோல் 80%+எத்தனால் 20%) பரவலாக பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் சட்ட அளவீட்டுத் துறை நடத்திய ஆய்வில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் உள்ள எத்தனால் அளவு குறித்த விவரங்களை முறையாக வழங்காத நிலையில், கர்நாடகாவின் 7 மாவட்டங்களில் 63 பெட்ரோல் மாதிரிகளை சேகரித்து தேசிய தர அங்கீகார வாரியத்தின் சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டது.

அதில், இந்தியன் ஆயில் பெட்ரோலில் 31.2 சதவீதம் அளவிற்கும், HPCL பெட்ரோலில் 3.5 சதவீதம் அளவிற்கும் எத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மத்திய அரசு நிர்ணயித்த 20 சதவீதம்(E20) அளவை விட அதிகமாகும்.

எத்தனாலின் அளவு அதிகரிப்பது வாகனங்களின் செயல்பாடுகளை பாதிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடும் நிலையில், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அமைச்சர் ரிஷ்வான் அர்ஷத் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை கர்நாடக அரசு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
டிஜிட்டல் வங்கி வீழ்ச்சி - பராகுவே அதிபர் பதவி விலகல்
அடுத்த செய்தி
ஆசிய திட்டங்களுக்கு ஐரோப்பிய நிதி கிடைப்பதில் தாமதம்

தொடர்புடைய செய்திகள்