Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உக்ரைன் போரை நிறுத்த அமைதி தீர்வே வழி - பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கருத்து

உக்ரைன் போரை நிறுத்த அமைதி தீர்வே வழி - பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கருத்து

வலிமையும், வளங்களும் குறைந்துவிட்டன. இந்த மோதலுக்கு அமைதித் தீர்வைத் தவிர வேறு வழியில்லை.

பகிரவும் WhatsApp Facebook

உக்ரைன் மோதலுக்கு அமைதித் தீர்வைத் தவிர மாற்றுவழி இல்லை என்றும், தீர்வுகாண விரும்பும் அனைவரையும் வரவேற்க பெலாரஸ் தயாராக இருப்பதாகவும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்தார்.

பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில் நடைபெற்ற 4-வது சர்வதேச யுரேசியப் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது: உக்ரைன் போர் வரும் மாதங்களில் முடிவுக்கு வரும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அனைவரும் சோர்வடைந்துள்ளனர். வலிமையும், வளங்களும் குறைந்துவிட்டன. இந்த மோதலுக்கு அமைதித் தீர்வைத் தவிர வேறு வழியில்லை.


மோதலை நிறுத்தாமல் தொடர்ந்து தீவிரப்படுத்தினால் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்ள நேரிடும். உக்ரைனில் ரஷ்யா ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. இதை நாங்கள் நன்கு அறிவோம்.


உடன்பாடு காண விரும்புவோர் மின்ஸ்க்கிற்கு வரலாம். எங்களுக்குச் சகோதரர்களான இரு நாட்டு மக்களிடையே, எங்கள் எல்லையையொட்டி நடைபெறும் இந்த மோதலுக்கு விரைவில் அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும்.
பெலாரஸைப் போருக்குள் இழுக்கச் சிலர் முயல்கின்றனர். அது போரை மிகவும் அபாயகரமான நிலைக்குக் கொண்டுசெல்லும். இதில் ஈடுபடுவதைத் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.


போர் தொடங்கியதிலிருந்து ஐந்து லட்சம் உக்ரைனியர்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்களுக்கு வீட்டுவசதியும், பெலாரஸ் மக்களுக்கு இணையாக வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி பெறும் உரிமைகளும் வழங்கப்படுகின்றன.


அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைகள் உலகைப் பிளவுபடுத்துகின்றன. இருப்பினும், அவரது நடவடிக்கைகள் அணுஆயுத மோதலாக வெடிக்கக்கூடிய மூன்றாம் உலகப் போரைத் தடுக்கின்றன. இதற்காகவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம்.
எங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிச் செல்லும் சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுக்க மாட்டோம். ஐரோப்பிய நாடுகள் விலைவாசி உயர்வு, வாழ்க்கைத்தரச் சரிவு உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகின்றன.

 ரஷ்யாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்து, ஆயுதப் போட்டியையும் ராணுவமயமாக்கலையும் ஊக்குவிக்கின்றன. அனைத்துப் பிரச்சினைகளையும் வலிமையின் அடிப்படையில் அணுகும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முயற்சிகள் பலனளிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
அடுத்த செய்தி
Indian-Americans make strong showing

தொடர்புடைய செய்திகள்