Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ சுற்றுச்சூழல் பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

பகிரவும் WhatsApp Facebook

ஓமனின் லிமா நகருக்கு வடகிழக்கே கடலில் சென்ற எண்ணெய்க் கப்பலின் இயந்திர அறையை அடையாளம் தெரியாத இரு எறிகணைகள் தாக்கியதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ சுற்றுச்சூழல் பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடந்துள்ளது. லிமாவிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் சம்பவம் நிகழ்ந்ததாகக் கப்பல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கப்பலைத் தாக்கிய எறிகணைகளின் வகை மற்றும் அவை ஏவப்பட்ட இடம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் குறித்த தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. கப்பலின் பெயர் உள்ளிட்ட கூடுதல் விவரங்களும் வெளியிடப்படவில்லை.


இதனிடையே, இந்தியக் குழுவினருடன் சென்ற பாரம்பரிய மரக்கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேறியபோது திங்கள்கிழமை தாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. திங்கள்கிழமை காலை 11.05 மணிக்கு மரக்கப்பல் மீதான தாக்குதல் நடந்துள்ளது.


உயிர் பிழைத்த பணியாளர்களை ஓமன் கடற்படை மீட்டதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு கூறியுள்ளது. எனினும், தாக்குதலுக்குள்ளான மரக்கப்பலின் தற்போதைய நிலை தெரியவில்லை. மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.


இரு சம்பவங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் நிலையில், அப்பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் கப்பல் நிர்வாகங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
MeitY unveils three indigenous AI models under IndiaAI Mission
அடுத்த செய்தி
உக்ரைன் போரை நிறுத்த அமைதி தீர்வே வழி - பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கருத்து

தொடர்புடைய செய்திகள்