Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உலகக் குழந்தைகள் தினம் - 10 கி.மீ. தொலைவுக்கு ஓட்டம்

உலகக் குழந்தைகள் தினம் - 10 கி.மீ. தொலைவுக்கு ஓட்டம்

சமூகப் பங்கேற்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு அமர்வுகளும் நடத்தப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

உலகக் குழந்தைகள் தினத்தையொட்டி, கம்போடியாவின் அங்கோர் தொல்லியல் பூங்காவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாகோங் கோயில் அருகே நடைபெற்ற ஓட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக நடவடிக்கைகளில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், பெற்றோர், அரசு பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


3 மற்றும் 10 கி.மீ. தொலைவுக்கு ஓட்டங்கள் நடைபெற்றன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், இணையப் பாதுகாப்பு, மனநலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமூகப் பங்கேற்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு அமர்வுகளும் நடத்தப்பட்டன.


வறுமை, காலநிலை நெருக்கடி, இணையவழிப் பாலியல் சுரண்டல், மனநலச் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று கம்போடியாவுக்கான யுனிசெப் பிரதிநிதி மஹா தமாஜ் வலியுறுத்தினார். குழந்தைகள் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி
ஐரோப்பாவுக்கு சீன பைக் ஏற்றுமதி 17.17% உயர்வு
அடுத்த செய்தி
தஜிகிஸ்தானில் வேளாண் உற்பத்தி 8.5% உயர்வு

தொடர்புடைய செய்திகள்