Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தஜிகிஸ்தானில் வேளாண் உற்பத்தி 8.5% உயர்வு

தஜிகிஸ்தானில் வேளாண் உற்பத்தி 8.5% உயர்வு

முதல் ஆறு மாதங்களில் வேளாண் ஏற்றுமதி 4.05 கோடி டாலரை எட்டியது.

பகிரவும் WhatsApp Facebook

2026-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வேளாண் உற்பத்தி மதிப்பு 8.5 சதவீதம் உயர்ந்து, 6,710 கோடி சோமோனியை எட்டியது. இது சுமார் 730 கோடி அமெரிக்க டாலருக்குச் சமம்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தஜிகிஸ்தான் வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி கோவர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.


நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தியில் கத்லோன் மாகாணம் 53.3 சதவீதப் பங்களிப்புடன் முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து, சுக்த் மாகாணம் 31.4 சதவீதப் பங்களிப்பை அளித்தது. இவ்விரு மாகாணங்களும் சேர்ந்து நாட்டின் வேளாண் உற்பத்தியில் 84.7 சதவீதத்தை அளித்தன.


தலைநகர் துஷான்பே மற்றும் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்துக்கு உட்பட்ட நகரங்கள், மாவட்டங்களின் பங்கு 14.2 சதவீதமாக இருந்தது. கோர்னோ-பதாக்ஷான் தன்னாட்சிப் பிராந்தியம் 1.1 சதவீதப் பங்களிப்பை அளித்தது.


உருளைக்கிழங்கு, காய்கறிகள், வயல் பயிர்கள், திராட்சை மற்றும் கால்நடைப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்ததே ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தஜிகிஸ்தான் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் ஒன்றான வேளாண் துறையில், ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. அரசின் ஏற்றுமதி முகமை வெளியிட்ட தரவுகளின்படி, 2026-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வேளாண் ஏற்றுமதி 4.05 கோடி டாலரை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி மதிப்பு 67 லட்சம் டாலர் அதிகரித்துள்ளது. இது 19.7 சதவீத வளர்ச்சியாகும்.

முந்தைய செய்தி
உலகக் குழந்தைகள் தினம் - 10 கி.மீ. தொலைவுக்கு ஓட்டம்
அடுத்த செய்தி
முப்படை ஒருங்கிணைப்புக்கு ஜப்பான் திட்டம்

தொடர்புடைய செய்திகள்