Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் ஜப்பானிய எழுத்து கலைக்கு இடம்

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில்  ஜப்பானிய எழுத்து கலைக்கு இடம்
ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் எழுதிய எழுத்துக் கலைஞர்.

கடந்த 2023-ம் ஆண்டு ஷோடோவை யுனெஸ்கோ பட்டியலுக்குப் பரிந்துரைக்க ஜப்பான் கலாசார விவகாரங்கள் கவுன்சில் தேர்வு செய்தது.

பகிரவும் WhatsApp Facebook

ஜப்பானின் பாரம்பரிய எழுத்துக் கலையான ‘ஷோடோ’வை யுனெஸ்கோவின் கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க, அதன் ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஷோடோ எழுத்துக்கலைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கான பரிந்துரை கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சீனாவின் சியாமென் நகரில் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும் யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழுக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஜப்பானிய மொழியில் பயன்படுத்தப்படும் காஞ்சி, கானா எழுத்துகளைத் தூரிகை மூலம் அழகாக எழுதும் பாரம்பரியக் கலையே ஷோடோ எனப்படுகிறது. சீன எழுத்துமுறை ஜப்பானில் அறிமுகமான பின்னர், அந்நாடு தனக்கென தனித்துவமான எழுத்துக்கலை வடிவங்களை உருவாக்கியது.
ஜப்பானில் பள்ளிகள், கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு கல்வி நடவடிக்கைகள் மூலம் ஷோடோ கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கலாசார அறிவும் பாரம்பரிய விழுமியங்களும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்படுவதாக யுனெஸ்கோ மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானின் முக்கியமான கலாசாரப் பாரம்பரியங்களில் ஒன்றான ஷோடோ, சர்வதேச அங்கீகாரத்துக்குத் தகுதியானதாகக் கருதப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு ஷோடோவை யுனெஸ்கோ பட்டியலுக்குப் பரிந்துரைக்க ஜப்பான் கலாசார விவகாரங்கள் கவுன்சில் தேர்வு செய்தது. இதற்கான ஆவணங்கள் 2025-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டன.
ஏற்கெனவே சீன எழுத்துக்கலை யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஷோடோவுக்கும் அங்கீகாரம் கிடைத்தால், யுனெஸ்கோவின் கலாசாரப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் ஜப்பானிய பாரம்பரியங்களின் எண்ணிக்கை 24 ஆக உயரும்.
 


முந்தைய செய்தி
வீட்டோ அதிகாரத்தில் கைவைக்க வேண்டாம்: ரஷ்யா திட்டவட்ட அறிவிப்பு
அடுத்த செய்தி
DMK attempting to poach TVK MLAs, alleges Minister

தொடர்புடைய செய்திகள்