Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வீட்டோ அதிகாரத்தில் கைவைக்க வேண்டாம்: ரஷ்யா திட்டவட்ட அறிவிப்பு

வீட்டோ அதிகாரத்தில் கைவைக்க வேண்டாம்: ரஷ்யா திட்டவட்ட அறிவிப்பு

பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பு மற்றும் அதிகாரங்களில் மாற்றங்களை மேற்கொள்வது பொதுச் செயலாளரின் அதிகார வரம்புக்குள் வராது

பகிரவும் WhatsApp Facebook

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் எந்த திட்டத்தையும் ரஷ்யா ஒருபோதும் ஏற்காது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச அமைப்புகள் துறை இயக்குநர் கிரில் லோக்வினோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரம் என்பது ஒரு சிறப்புச் சலுகை அல்ல. அது மிகப்பெரிய பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடமையாகும். சர்வதேச விவகாரங்களில் நீடித்த, நியாயமான சமரசத் தீர்வுகளை எட்டுவதற்கு இந்த அதிகாரம் முக்கியமான கருவியாக விளங்குகிறது.

வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்தவிதமான நியாயமான காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் ரஷ்யா ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது.
பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திறன் குறைந்து வருவதற்கு வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படுவது காரணமல்ல. மாறாக, மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அமைப்பாகப் பயன்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பு மற்றும் அதிகாரங்களில் மாற்றங்களை மேற்கொள்வது பொதுச் செயலாளரின் அதிகார வரம்புக்குள் வராது. இத்தகைய சீர்திருத்தங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்று வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினால், முக்கியத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுக்க முடியும். இந்நிலையில், அந்த அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ரஷ்யா தனது எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
HC seeks replies from HR&CE, Corporation over road on temple land
அடுத்த செய்தி
யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் ஜப்பானிய எழுத்து கலைக்கு இடம்

தொடர்புடைய செய்திகள்