Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விமானக் கட்டணத்தை கட்டுப்படுத்தும் சட்டத்திருத்ததிற்கு ஒப்புதல்

விமானக் கட்டணத்தை கட்டுப்படுத்தும் சட்டத்திருத்ததிற்கு ஒப்புதல்

அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நலனுக்காகத் தலையீடு அவசியம் என்றும் மத்திய அரசு கருதினால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.

பகிரவும் WhatsApp Facebook

விமானக் கட்டணங்கள் அசாதாரணமாக உயரும்போது, பொதுமக்கள் நலன் கருதி குறிப்பிட்ட காலத்துக்கு விமான நிறுவனங்களின் கட்டணத்தில் மத்திய அரசு தலையிடும் சட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


இந்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த 1937-ம் ஆண்டின் விமான விதிகளுக்குப் பதிலாக, 'பாரதிய வாயுயான் நியமம் 2026' என்ற புதிய விதிகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 31-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த விதிகள், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகின்றன.

இதன்படி, அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நலனுக்காகத் தலையீடு அவசியம் என்றும் மத்திய அரசு கருதினால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். குறிப்பிட்ட காலத்துக்கு விமானக் கட்டணத்தை மாற்றியமைக்கவும் அரசு அறிவுறுத்தலாம். அதேநேரத்தில், வழக்கமான சூழ்நிலைகளில் விமானக் கட்டணங்களை அரசு நிர்ணயிக்காது. நிறுவனங்களே சந்தை நிலவரம் மற்றும் இயக்கச் செலவுகளின் அடிப்படையில் கட்டணங்களைத் தீர்மானிக்கலாம்.

மேலும், விமான நிறுவனங்கள் தங்களது கட்டண விவரங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) சமர்ப்பிக்க வேண்டும். கட்டண விவரங்களை இணையதளங்களிலும் வெளியிட வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது அடிப்படைக் கட்டணம், வரிகள், சேவைக் கட்டணங்கள், ரத்து செய்வதற்கான கட்டணம், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்களைத் தனித்தனியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
முந்தைய செய்தி
பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் நிகர லாபம் 25% உயர்வு
அடுத்த செய்தி
தரமற்ற 400 டன் வெங்காயம் கொள்முதல்: ஆணையை ரத்து செய்த தமிழக அரசு

தொடர்புடைய செய்திகள்