Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தரமற்ற 400 டன் வெங்காயம் கொள்முதல்: ஆணையை ரத்து செய்த தமிழக அரசு

தரமற்ற 400 டன் வெங்காயம் கொள்முதல்: ஆணையை ரத்து செய்த தமிழக அரசு

மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தரமான வெங்காயத்துடன் தரம் குறைந்த வெங்காயமும் கலந்திருப்பது தெரியவந்தது.

பகிரவும் WhatsApp Facebook

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரமற்றதாக இருந்ததால், அதற்கான கொள்முதல் ஆணையைத் தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் ரத்து செய்துள்ளது.


தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை சார்பில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் மூன்று கட்டங்களாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

முதல் கட்டத்தில் 949.44 மெட்ரிக் டன் பெறப்பட்டு, 922.92 டன்னும், இரண்டாவது கட்டத்தில் 848.31 டன் பெறப்பட்டு, 811.26 டன்னும், மூன்றாவது கட்டத்தில் 700.19 டன் பெறப்பட்டு, 646.14 டன்னும் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு மொத்தம் 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பில் இருந்த வெங்காயமும் சுமார் 25 நாட்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்ததால், தற்போது நியாயவிலைக் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அக்டோபர் மாதத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்திடம் இருந்து கிலோ ரூ.29 என்ற விலையில், குறைந்தபட்சம் 45 மில்லி மீட்டர் அளவுள்ள முதல் தர வெங்காயம் 400 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் ஆணை வழங்கியிருந்தது.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தரமான வெங்காயத்துடன் தரம் குறைந்த வெங்காயமும் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொருக்குப்பேட்டைக்கு வந்த சரக்கை அக்டோபர் 31-ஆம் தேதி ஆய்வு செய்தபோது, 20 முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதிப்புக்குள்ளான வெங்காயம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், 50.2 சதவீத வெங்காயம் 45 மில்லி மீட்டர் அளவுக்கும் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதனால், 400 மெட்ரிக் டன் வெங்காயத்துக்கான கொள்முதல் ஆணையைத் தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் ரத்து செய்துள்ளது. மேலும், தரமற்ற வெங்காயச் சரக்குகளை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இன்ஃபோ டெக்ஸ்ட்

* நியாயவிலைக் கடைகளில் விற்பனை விலை: கிலோ ரூ.35

* மூன்று கட்டங்களில் விற்பனை: 2,380.32 மெட்ரிக் டன்

* ரத்து செய்யப்பட்ட கொள்முதல் அளவு: 400 மெட்ரிக் டன்

* கொள்முதல் விலை: கிலோ ரூ.29

முந்தைய செய்தி
விமானக் கட்டணத்தை கட்டுப்படுத்தும் சட்டத்திருத்ததிற்கு ஒப்புதல்
அடுத்த செய்தி
பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தொடர்புடைய செய்திகள்