Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

இந்த உத்தரவை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த அக்.23ம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி
தரமற்ற 400 டன் வெங்காயம் கொள்முதல்: ஆணையை ரத்து செய்த தமிழக அரசு
அடுத்த செய்தி
டாஸ்மாக்கை இழுத்து மூடிய ஊழியர்கள்: 2 நாளில் ரூ.230 கோடியை இழந்த அரசு!

தொடர்புடைய செய்திகள்