Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாஸ்மாக்கை இழுத்து மூடிய ஊழியர்கள்: 2 நாளில் ரூ.230 கோடியை இழந்த அரசு!

டாஸ்மாக்கை இழுத்து மூடிய ஊழியர்கள்: 2 நாளில் ரூ.230 கோடியை இழந்த அரசு!

இரண்டு நாட்களில் மொத்தம் 1,729 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

காலி மதுபாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டத்துக்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய 2 நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரசுக்கு 2 நாளில் ரூ.230 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவும், கடந்த திங்களன்று ரூ.80 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கடைகளை மூடியதாக கூறப்படும் பணியாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரண்டு நாட்களில் மொத்தம் 1,729 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 245 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஞாயிற்றுக்கிழமை 931 பேருக்கு நோட்டீஸ், 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், திங்கட்கிழமை 798 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 241 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியான நடவடிக்கை:

மதுரை- 475 பேர், சேலம்-459, சென்னை- 341 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியிடை நீக்கத்தைப் பொறுத்தவரை சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 169 பேரும், சேலம்-75 பேரும், மதுரை மண்டலத்தில் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பும், பணியாளர்கள் மீதான நிர்வாக நடவடிக்கைகளும் டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முந்தைய செய்தி
பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்க தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி
அடுத்த செய்தி
சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விஜயகாந்த் போட்ட வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம்

தொடர்புடைய செய்திகள்