Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விஜயகாந்த் போட்ட வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம்

சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விஜயகாந்த் போட்ட வழக்கு: முடித்து வைத்து உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2012ல் லோக் சத்தா கட்சி நிர்வாகியாக இருந்த ஜெகதீஸ்வரன், 2015ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2023ல் அதிமுக கொறடாவாக இருந்த எஸ்பிவேலுமணி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு சட்டபேவை நிகழ்வுகள் தற்போது முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாக பேரவை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிய வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.


சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி 2012ல் லோக் சத்தா கட்சி நிர்வாகியாக இருந்த ஜெகதீஸ்வரன், 2015ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2023ல் அதிமுக கொறடாவாக இருந்த எஸ்பிவேலுமணி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இவர்களது மனுக்களில், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற செயலாளர் தரப்பில், தற்போது சட்டப்பேவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
முந்தைய செய்தி
டாஸ்மாக்கை இழுத்து மூடிய ஊழியர்கள்: 2 நாளில் ரூ.230 கோடியை இழந்த அரசு!
அடுத்த செய்தி
OpenAI partners with security firms to strengthen AI-powered cyber defence

தொடர்புடைய செய்திகள்