Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் நிகர லாபம் 25% உயர்வு

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் நிகர லாபம் 25% உயர்வு

25 சதவீதம் அதிகரித்து ரூ.5,952 கோடியாக உயர்ந்துள்ளதாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 25 சதவீதம் அதிகரித்து ரூ.5,952 கோடியாக உயர்ந்துள்ளதாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.4,746 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், தற்போது அதன் நிகர லாபம் 25 சதவீதம் அதிகரித்து ரூ.5,952 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.37,403 கோடியிலிருந்து ரூ.43,416 கோடியாக உயர்ந்துள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 
இந்நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.23,824 கோடியாக அதிகரித்த அதேவேளையில், மொத்த செலவினமும் ரூ.34,812 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் துணை நிறுவனமான பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸின் லாபம் 19 சதவீதம் சரிந்து ரூ.420 கோடியாகக் குறைந்துள்ளது. 

மேலும், வளர்ந்து வரும் துணை வணிகப் பிரிவுகளின் இழப்பு ரூ.144 கோடியாக உள்ள நிலையில், பிஎம்எஸ் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த மாற்று முதலீட்டுப் பிரிவுகளிலும் நிறுவனம் விரிவாக்கம் கண்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்று செயல்படும் நோக்கில் 'பஜாஜ் ரீஇன்சூரன்ஸ்' என்ற புதிய துணை நிறுவனத்தையும் அக்டோபர் மாதத்தில் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 14% உயர்வு
அடுத்த செய்தி
விமானக் கட்டணத்தை கட்டுப்படுத்தும் சட்டத்திருத்ததிற்கு ஒப்புதல்

தொடர்புடைய செய்திகள்