Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 14% உயர்வு

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 14% உயர்வு

வாராக் கடன் ஒதுக்கீடுகள் குறைந்ததன் காரணமாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 14.3 சதவீதம் அதிகரித்து ரூ.23,038 கோடியாக உயர்ந்துள்ளது என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறைத் தாக்கலில் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.20,160 கோடியாக இருந்த வங்கியின் லாபம், வட்டி வருவாய் வளர்ச்சி மற்றும் வாராக் கடன் ஒதுக்கீடுகள் குறைந்ததன் காரணமாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருவாய் 15 சதவீதம் உயர்ந்து ரூ.49,143 கோடியை எட்டியுள்ளது. மேலும், வங்கியின் சொத்துத் தரம் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீரடைந்து, மொத்த வாராக் கடன் விகிதம் 1.39 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.36 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

 
வங்கியின் மொத்த கடன் வழங்கல் 18 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.52 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், வாராக் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் ரூ.4,217 கோடியாகக் குறைந்ததும் இந்த லாப உயர்வுக்கு முக்கியப் பங்களித்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
இதேபோல், வங்கியின் மொத்த வைப்புத் தொகை (டெபாசிட்) அளவு 9 சதவீதம் அதிகரித்து ரூ.51 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், 'யோனோ' செயலி வாயிலான டிஜிட்டல் சேவைகளும், சர்வதேச வர்த்தகமும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது கிளைகளின் வணிக விரிவாக்கத்தை மேலும் வேகப்படுத்த உள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
ஐடிசிக்கு வலுசேர்த்த பிஸ்கட், நூடுல்ஸ் விற்பனை
அடுத்த செய்தி
பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் நிகர லாபம் 25% உயர்வு

தொடர்புடைய செய்திகள்