Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐடிசிக்கு வலுசேர்த்த பிஸ்கட், நூடுல்ஸ் விற்பனை

ஐடிசிக்கு வலுசேர்த்த பிஸ்கட், நூடுல்ஸ் விற்பனை

கடந்த 14 காலாண்டுகளில் இதுவே அதிகபட்ச வருவாய் வளர்ச்சியாகும்.

பகிரவும் WhatsApp Facebook

ஐடிசி நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் பிஸ்கட், நூடுல்ஸ், உப்பு உள்ளிட்ட நுகர்பொருள் பிரிவுகள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்து, சிகரெட் வர்த்தகத்தை முந்தியுள்ளன.

சிகரெட் அல்லாத நுகர்பொருள் பிரிவின் வருவாய், முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் உயர்ந்து, ரூ.6,967 கோடியை எட்டியது. கோதுமை மாவைத் தவிர்த்தால், வளர்ச்சி 23 சதவீதமாக இருந்தது. கடந்த 14 காலாண்டுகளில் இதுவே அதிகபட்ச வருவாய் வளர்ச்சியாகும்.


இப்பிரிவின் வட்டி, வரிக்கு முந்தைய லாபம் 28 சதவீதம் அதிகரித்து ரூ.558 கோடியாக உயர்ந்தது. மூலப்பொருள் செலவுகள் அதிகரித்தபோதும், செலவுக் கட்டுப்பாடு, விலை மாற்றங்கள் மூலம் நிறுவனம் லாப விகிதத்தை மேம்படுத்தியது.


சன்ஃபீஸ்ட் பிஸ்கட், யிப்பீ நூடுல்ஸ், பிங்கோ சிற்றுண்டிகள், ஆசீர்வாத் உப்பு ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இணையவழி விற்பனையும் வளர்ச்சிக்கு உதவியது. அதேவேளையில், வரி உயர்வால் சிகரெட் விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டதாக நிறுவனம் தெரிவித்தது.


தொடர்ந்து நான்காவது காலாண்டாக இப்பிரிவு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மசாலா, வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவையும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தன.

முந்தைய செய்தி
டிரைடென்ட் லாபம் 93% உயர்வு - பங்குகள் விலை ஏற்றம்
அடுத்த செய்தி
எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 14% உயர்வு

தொடர்புடைய செய்திகள்