Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டிரைடென்ட் லாபம் 93% உயர்வு - பங்குகள் விலை ஏற்றம்

டிரைடென்ட் லாபம் 93% உயர்வு - பங்குகள் விலை ஏற்றம்

தேசிய பங்குச் சந்தையில் டிரைடென்ட் பங்கு 11.7% உயர்ந்து ரூ.24.80-க்கு வர்த்தகமானது.

பகிரவும் WhatsApp Facebook

ஜவுளி மற்றும் காகித உற்பத்தி நிறுவனமான டிரைடென்ட்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 93.4% அதிகரித்ததையடுத்து, நவம்பர் 3-ம் தேதி அதன் பங்குகள் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 11%-க்கும் மேல் உயர்ந்தன. நிறுவனம் ரூ.4,650 கோடி விரிவாக்கத் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

2026–27 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.176 கோடியாக உயர்ந்தது. எனினும், வருவாய் 3.8% குறைந்து ரூ.1,719 கோடியாக இருந்தது. வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் 46.7% அதிகரித்து ரூ.314 கோடியை எட்டியது.


நேற்று காலை தேசிய பங்குச் சந்தையில் டிரைடென்ட் பங்கு 11.7% உயர்ந்து ரூ.24.80-க்கு வர்த்தகமானது.
நூல், படுக்கை விரிப்புகள், காகிதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஆலைகளை நவீனப்படுத்தவும் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முதலீட்டுத் திட்டத்திற்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் ரூ.1,660 கோடியில் புதிய நூற்பாலை அமைக்கப்படுகிறது. இது 2029 செப்டம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றாலை, சூரிய மின்சாரம் இணைந்த திட்டத்துக்கு ரூ.654 கோடி ஒதுக்கப்படுகிறது.

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு - 4வது நாளாக ஏற்றம்
அடுத்த செய்தி
ஐடிசிக்கு வலுசேர்த்த பிஸ்கட், நூடுல்ஸ் விற்பனை

தொடர்புடைய செய்திகள்