Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு - 4வது நாளாக ஏற்றம்

சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு - 4வது நாளாக ஏற்றம்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் வர்த்தக நேர உச்சத்தில் நிறைவடைந்தன.

பகிரவும் WhatsApp Facebook

கச்சா எண்ணெய் விலை சமீபத்தைய உச்சத்திலிருந்து சரிந்தது, வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் அதிகரித்தது ஆகியவற்றின் பின்னணியில், இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்தன. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் வர்த்தக நேர உச்சத்தில் நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் 30 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ், 1,225.07 புள்ளிகள் (1.62 சதவீதம்) உயர்ந்து 76,917.85 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் 50 நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி, 370.05 புள்ளிகள் (1.58 சதவீதம்) அதிகரித்து 23,810.85 புள்ளிகளில் முடிவடைந்தது.


சென்செக்ஸ் பட்டியலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டன. பவர் கிரிட், பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல், டிரென்ட் ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.72 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 105.6 அமெரிக்க டாலராக இருந்தது. இருப்பினும், சமீபத்தைய உச்சநிலையுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் விலை குறைந்திருப்பது சந்தைக்கு ஆதரவாக அமைந்தது.


பங்குச் சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.3,114.68 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர். நீண்டகால விற்பனைக்குப் பிறகு அவர்களின் முதலீடு திரும்பியது சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்தது.
கடந்த நான்கு வர்த்தக நாள்களில் சென்செக்ஸ் மொத்தம் 3,671.82 புள்ளிகள் (5 சதவீதம்), நிஃப்டி 1,112 புள்ளிகள் (4.89 சதவீதம்) உயர்ந்துள்ளன.


திங்கள்கிழமையும் சென்செக்ஸ் 1,233.25 புள்ளிகள் அல்லது 1.66 சதவீதம் உயர்ந்து 75,692.78 புள்ளிகளில் முடிந்திருந்தது. அன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 387.70 புள்ளிகள் அல்லது 1.68 சதவீதம் அதிகரித்து 23,440.80 புள்ளிகளை எட்டியது. இரு குறியீடுகளும் அன்றும் வர்த்தக நேர உச்சத்திலேயே நிறைவடைந்தன. அந்த ஏற்றம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்ததால், தொடர்ந்து நான்கு நாள்களாக இரு சந்தைக் குறியீடுகளும் கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.


கச்சா எண்ணெய் விலைச் சரிவு, அமெரிக்க அரசுக் கடன்பத்திர வருவாய் குறைவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் ஆகியவை பொருளாதார அழுத்தங்களைத் தணித்ததாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார். வலுவான இரண்டாம் காலாண்டு நிறுவன வருவாயும் நம்பிக்கையை அதிகரித்ததாகக் கூறினார்.
ஆசியாவில் தென்கொரியா, ஷாங்காய் சந்தைகள் சரிந்தன. ஹாங்காங் உயர்ந்தது. ஐரோப்பியச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. அமெரிக்காவில் திங்கள்கிழமை நாஸ்டாக், எஸ் அண்ட் பி 500 சரிந்த நிலையில், டவ் ஜோன்ஸ் உயர்ந்தது.

முந்தைய செய்தி
கடனைக் குறைத்த Radico Khaitan
அடுத்த செய்தி
டிரைடென்ட் லாபம் 93% உயர்வு - பங்குகள் விலை ஏற்றம்

தொடர்புடைய செய்திகள்