Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடனைக் குறைத்த Radico Khaitan

கடனைக் குறைத்த Radico Khaitan

அதிகபட்சமாக ரூ.771 கோடியாக இருந்த நிகரக் கடன் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உயர்ரக மதுபான விற்பனை அதிகரித்ததால், ராடிகோ கைதான் நிறுவனத்தின் நிகர லாபம் 2026–27 நிதியாண்டின் முதல் பாதியில் 67.8% உயர்ந்து ரூ.457 கோடியானது. நிறுவனத்தின் நிகரக் கடன் ரூ.175 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் செயல்பாட்டு நிகர வருவாய் 14.3% அதிகரித்து ரூ.3,430 கோடியை எட்டியது. உயர்ரக மதுபானப் பிரிவின் விற்பனை அளவு 35.8% வளர்ந்தது. மொத்த விற்பனை அளவில் இப்பிரிவின் பங்கு 42.5 சதவீதத்திலிருந்து 53.4 சதவீதமாக உயர்ந்தது. வழக்கமான மற்றும் பிற தயாரிப்புகளின் விற்பனை அளவு 12.5% சரிந்தது.


வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் 50.9% உயர்ந்து ரூ.705 கோடியானது. அதன் லாப விகிதம் 15.6 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக அதிகரித்தது. அதிகபட்சமாக ரூ.771 கோடியாக இருந்த நிகரக் கடன் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


மேஜிக் மொமென்ட்ஸ் வோட்காவின் முதல் அரையாண்டு விற்பனை 62.1 லட்சம் பெட்டிகளாக இருந்தது. வோட்கா விற்பனையைச் சார்ந்திருப்பதும், சர்வதேச மதுபான நிறுவனங்களின் போட்டியும் முக்கியச் சவால்களாக உள்ளன.


இதனிடையே, அலைய்டு பிளெண்டர்ஸின் வருவாய் 10.9% அதிகரித்து ரூ.2,135 கோடியானாலும், நிகர லாபம் 4.2% குறைந்து ரூ.114 கோடியானது. மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் நிறுவனத்துக்கு ரூ.53 கோடி பாதிப்பை ஏற்படுத்தின.


இம்பீரியல் ப்ளூ பிராண்டை கையகப்படுத்திய திலக்நகர் இண்டஸ்ட்ரீஸின் நிகர கடன் ரூ.2,074 கோடியாக உள்ளது. உயர்ரக விற்பனை வளர்ச்சியை தொடர்ந்து லாபமாக மாற்றுவதும், பணப்புழக்கத்தை மேம்படுத்துவதும் இந்நிறுவனங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி
காரில் கடத்திய 226 கிலோ குட்கா பறிமுதல்
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு - 4வது நாளாக ஏற்றம்

தொடர்புடைய செய்திகள்