Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போர்ச்சுகலின் கடைசி சர்க்கஸ் யானை ஜூலிக்கு புதுவாழ்வு

போர்ச்சுகலின் கடைசி சர்க்கஸ் யானை ஜூலிக்கு புதுவாழ்வு

ஜூலி பாங்கியா யானைகள் சரணாலயத்துக்கு மாற்றப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

போர்ச்சுகலின் கடைசி சர்க்கஸ் யானையான ஜூலி, தெற்குப் பகுதியில் உள்ள அலென்டெஜோ சரணாலயத்தின் சூழலுக்குப் பழகியுள்ளது. அங்கு தங்கிய மூன்று மாத காலத்தில் அதன் எடை சுமார் 100 கிலோ அதிகரித்துள்ளது.

விக்டர் ஹியூகோ கார்டினாலி சர்க்கஸ் நிர்வாகம் தாமாக முன்வந்து அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலி பாங்கியா யானைகள் சரணாலயத்துக்கு மாற்றப்பட்டது. அந்தச் சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்ட முதல் யானை ஜூலி. எவோரா மாவட்டத்தில் விலா விசோசா, அலன்ட்ரோவால் ஆகிய ஊர்களுக்கு இடையே 400 ஹெக்டேர் பரப்பில் இச்சரணாலயம் அமைந்துள்ளது.


புதிய இடத்துக்கு வந்தபோது ஜூலி தயக்கத்துடன் இருந்ததாக அதன் பராமரிப்பாளர் ஜானி நாசிமென்டோ தெரிவித்தார். சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு, அது தானாகவே வெளியே வந்து அங்குள்ள பாதைகளில் சுற்றத் தொடங்கியது. சேற்றுக் குட்டைகளில் புரள்வது இப்போது ஜூலிக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.


சர்க்கஸில் இருந்தபோது பெரும்பாலான நேரத்தை ஒரு கொட்டகையிலேயே ஜூலி கழித்ததாகவும், உடற்பயிற்சி செய்யப் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சரணாலய மேலாளர் ரயன் ஹாக்லி தெரிவித்தார்.

 தற்போது இரவு, பகல் எந்நேரமும் அது விரும்பிய பகுதிக்குச் செல்ல முடியும். தங்குமிடத்தில் ஓய்வெடுப்பதா, வெளியே சுற்றுவதா என்பதை ஜூலியே தீர்மானிக்கிறது. இந்தக் காலத்தில் அதன் எடை சுமார் 100 கிலோ கூடியது இயல்பானதுதான் என்றும் ஹாக்லி கூறினார்.

முந்தைய செய்தி
4 நிறுவனப் பங்குகள் 33% வரை உயர வாய்ப்பு - ஆனந்த் ரதி

தொடர்புடைய செய்திகள்