Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் விற்பனை 25% உயர்வு

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் விற்பனை 25% உயர்வு

இந்திய சந்தை குறித்த ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் புரிதலையும், எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனத்தின் உலகளாவிய வாகனத் தயாரிப்பு அனுபவத்தையும் ஒருங்கிணைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் செயல்படும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த அக்டோபர் மாதத்தில் 8,013 வாகனங்களை மொத்த விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் 6,397 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 25 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


இந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் இவி மற்றும் விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷன் ஆகிய புதிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வழங்கும் பணி வேகமடைந்துள்ளது.

இந்திய சந்தை குறித்த ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் புரிதலையும், எஸ்ஏஐசி மோட்டார் நிறுவனத்தின் உலகளாவிய வாகனத் தயாரிப்பு அனுபவத்தையும் ஒருங்கிணைத்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிலையான போக்குவரத்து, மேம்பட்ட தொழில்நுட்பம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தயாரிப்பு வரிசை மற்றும் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தி வருகிறது.

மேலும், நிறுவனம் தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து இதுவரை 1.50 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
முந்தைய செய்தி
பால்மர் லாரி நிகர லாபம் 40% உயர்வு
அடுத்த செய்தி
கையுறைகள் இன்றி ஹேர் கலர் - கோத்ரேஜ் புதிய அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்