Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பால்மர் லாரி நிகர லாபம் 40% உயர்வு

பால்மர் லாரி நிகர லாபம் 40% உயர்வு

முந்தைய லாபம் 42.95 சதவீதம் உயர்ந்து ரூ.93.63 கோடியாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பொதுத்துறை நிறுவனமான பால்மர் லாரி (Balmer Lawrie) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபத்தை 39.56 சதவீதம் உயர்த்தி ரூ.67.66 கோடியாகப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் லாபம் ரூ.48.48 கோடியாக இருந்தது.


ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 26.34 சதவீதம் அதிகரித்து ரூ.818.04 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.647.48 கோடியாக இருந்தது. வரிக்கு முந்தைய லாபம் 42.95 சதவீதம் உயர்ந்து ரூ.93.63 கோடியாக உள்ளது. 


 நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வருமானம் ரூ.1,570.58 கோடியாகவும், நிகர லாபம் ரூ.125.32 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

நவம்பர் 2-ஆம் தேதி கர்நாடகத்தின் ஹம்பியில் நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் காலாண்டு நிதி முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பால்மர் லாரி மினிரத்னா–I (Miniratna-I) பொதுத்துறை நிறுவனமாகும்.

முந்தைய செய்தி
புதிய திரைப்படங்களுக்கு 6 காட்சிகள் – முதல்வர் அனுமதி
அடுத்த செய்தி
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் விற்பனை 25% உயர்வு

தொடர்புடைய செய்திகள்