Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய திரைப்படங்களுக்கு 6 காட்சிகள் – முதல்வர் அனுமதி

புதிய திரைப்படங்களுக்கு 6 காட்சிகள் – முதல்வர் அனுமதி

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகள் திரையிட முதல்வர் அனுமதி அளித்துள்ளார். திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஒரு வாரத்துக்கு தினசரி அனைத்து திரையரங்குகளிலும் 6 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் பிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன.

குறிப்பாக, புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு, திரையரங்குகளில் காலை 06.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 02.30 மணி வரை, நாளொன்றுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

திரைப்படத் துறையினரின் இந்தக் கோரிக்கை குறித்து முதல்வர் விஜய் கலந்தாலோசித்தார். இதையடுத்து, தமிழ்நாடு திரையரங்குகள் விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களுக்கு, அவை வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்த்துக்கு தினசரி 6 காட்சிகளுக்கு மிகாமல் திரையிட அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடப்பட வேண்டும். மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினசரி 6 காட்சிகள் திரையிடவும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

1957-ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் விதியில் திரையரங்குகளுக்கு வழங்கப்படும் உரிம நிபந்தனைகளின்படி, தமிழகத்தில் வழக்கமாக தினசரி 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது. தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய படங்களுக்கு முதல் 7 நாளுக்கும், விடுமுறை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
Tasmac outlets reopen in Karur district
அடுத்த செய்தி
பால்மர் லாரி நிகர லாபம் 40% உயர்வு

தொடர்புடைய செய்திகள்