Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாபர் இந்தியாவின் Q2 நிகர லாபம் 11.70 % உயர்வு

டாபர் இந்தியாவின் Q2 நிகர லாபம் 11.70 % உயர்வு

நிறுவனத்தின் உள்நாட்டு வணிகத்தில் பிரீமியம் தயாரிப்புகளின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டாபர் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 11.70 சதவீதம் அதிகரித்து, ரூ.505 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான டாபர் இந்தியா, உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், தேன், டூத்பேஸ்ட் முதல் ஹேர் ஆயில் வரை பல்வேறு பிரிவுகளில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு, முதல் அரையாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டாபர் இந்தியா ரூ.3,563 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 11.60 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல, தொடர்ந்து நான்காவது காலாண்டாக இரட்டை இலக்க லாப வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர லாபம் 11.70 சதவீதம் அதிகரித்து ரூ.505 கோடியாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 11.1 சதவீதம் உயர்ந்து ரூ.7,327 கோடியாக உள்ளது. இதேகாலகட்டத்தில் நிகர லாபம் 13.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,096 கோடியாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு வணிகம் இரண்டாவது காலாண்டில் 10.70 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பொருட்களின் விற்பனை அளவு அடிப்படையிலான வளர்ச்சி 5.50 சதவீதமாக உள்ளது.

வழக்கமான தயாரிப்புகளைக் காட்டிலும் ப்ரீமியம் வகை தயாரிப்புகளின் வளர்ச்சி நான்கு மடங்கு அதிகமாக இருந்துள்ளது. நிறுவனத்தின் உள்நாட்டு வணிகத்தில் பிரீமியம் தயாரிப்புகளின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது.

இதே காலத்தில், டாபர் நிறுவனத்தின் சர்வதேச வணிகம் இந்திய ரூபாய் மதிப்பில் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வங்கதேசம், எகிப்து, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் துருக்கி உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. முதல் அரையாண்டில் சர்வதேச வணிகத்தின் வளர்ச்சி 19.40 சதவீதமாக உள்ளது.

பிரிவு வாரியாக, வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் பிரிவு 10.90 சதவீமும், ஹெல்த்கேர் பிரிவு 6.90 சதவீதமும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உணவு மற்றும் பானங்கள் பிரிவு 17.40 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.3.50 வழங்க டாபர் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது 350 சதவீத டிவிடெண்ட் ஆகும். இதற்காக மொத்தம் ரூ.620.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
மீனவரை தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை
அடுத்த செய்தி
மதுரையில் வாழைத்தார் விலை கடும் சரிவு

தொடர்புடைய செய்திகள்