Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாக்டர் அகர்வால்ஸ் H1 லாபம் 50% உயர்வு

டாக்டர் அகர்வால்ஸ் H1 லாபம் 50% உயர்வு

நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் (EBITDA) 27 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.362 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் லாப விகிதம் 28.20 சதவீதமாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் வருவாய் 28.70 சதவீதம் அதிகரித்து ரூ.1,269 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கண் தொடர்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.986 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 50.10 சதவீதம் அதிகரித்து ரூ.112 கோடியாக உயர்ந்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.75 கோடியாக இருந்தது. இதேபோல், நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் (EBITDA) 27 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.362 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் லாப விகிதம் 28.20 சதவீதமாக உள்ளது.

செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், கடந்தாண்டோடு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், அகர்வால்ஸ் ஹெல்த்கேர் செயல்பாட்டு வருவாய் 31.40 சதவீதம் உயர்ந்து ரூ.655 கோடியாகவும், நிகர லாபம் 55.80 சதவீதம் அதிகரித்து ரூ.57 கோடியாகவும் உள்ளது. மேலும், சென்னையில் உலகின் முதல் பிரத்யேக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி (PPP) சிகிச்சை மையத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது.

முந்தைய செய்தி
மழையால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது: அமைச்சர் நிர்மல்குமார்
அடுத்த செய்தி
எஃகு கழிவு விலைக்கு குறியீடு என்சிடிஇஎக்ஸ் ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்