Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மழையால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது: அமைச்சர் நிர்மல்குமார்

மழையால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது: அமைச்சர் நிர்மல்குமார்

ஆதாரம் இருந்ததாலேயே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அத்தியாவசியப் பொருட்களின் விலை மழையின் காரணமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.


மதுரை திருப்பரங்குன்றம் அருகே புளியங்குளம் அரசு பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

முதல்வர் உத்தரவுப்படி, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதுகுறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

ஆதாரம் இருந்ததாலேயே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணம் எங்கிருந்து வசூலிக்கப்பட்டது, அவரிடம் எப்போது, யார், எவ்வளவு கொடுத்தனர், பள்ளி குழந்தைகளின் சான்றிதழ் பெற எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாகவே இதுதொடர்பாக புகார்கள் வந்துள்ளன.
மேலும், ரூ.400 கோடிக்கு மேல் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. ஜாமின் மனு ரத்து தொடர்பான நீதிமன்றம் ஆணையிலேயே இதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய பொருட்களின் விலை மழையினால் உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலையை குறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
பார்தி ஏர்டெல் லாபம் 24% உயர்வு: Q2-வில் ரூ.10,710 கோடியாக அதிகரிப்பு
அடுத்த செய்தி
டாக்டர் அகர்வால்ஸ் H1 லாபம் 50% உயர்வு

தொடர்புடைய செய்திகள்