Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பார்தி ஏர்டெல் லாபம் 24% உயர்வு: Q2-வில் ரூ.10,710 கோடியாக அதிகரிப்பு

பார்தி ஏர்டெல் லாபம் 24% உயர்வு: Q2-வில் ரூ.10,710 கோடியாக அதிகரிப்பு

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 16.7 சதவீதம் அதிகரித்து ரூ.60,877.5 கோடியாக பதிவாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.10,710 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைவிட 24 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து பங்குச்சந்தையிடம் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,651 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது ரூ.10,710 கோடியாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 16.7 சதவீதம் அதிகரித்து ரூ.60,877.5 கோடியாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் வருவாய் ரூ.52,145.4 கோடியாக இருந்தது.
இந்தியாவில் நிறுவனத்தின் வருவாய் 9.4 சதவீதம் உயர்ந்து ரூ.42,308 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்திய மொபைல் சேவை வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 10.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய் உயர்வு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
மேலும், ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி மாத வருவாய் (ஏஆர்பியு) கடந்த ஆண்டின் ரூ.256-லிருந்து ரூ.271 ஆக அதிகரித்துள்ளது. இது நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
அதானி நிறுவனத்திடமிருந்து 4 அனல் மின்திட்டம் பெற்ற பிஹெச்இஎல்
அடுத்த செய்தி
மழையால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது: அமைச்சர் நிர்மல்குமார்

தொடர்புடைய செய்திகள்