Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதானி நிறுவனத்திடமிருந்து 4 அனல் மின்திட்டம் பெற்ற பிஹெச்இஎல்

அதானி நிறுவனத்திடமிருந்து 4 அனல் மின்திட்டம் பெற்ற பிஹெச்இஎல்

6,400 மெகாவாட் மதிப்பிலான ஆணை, பிஹெச்இஎல் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன்கள் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள நீடித்த நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் இந்தியா முழுவதும் நான்கு அனல் மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முக்கிய உள்நாட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, தலா 2x800 மெகாவாட் (MW) திறன் கொண்ட நான்கு திட்டங்களுக்குத் தேவையான கொதிகலன்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் தேவையான சேவைகளையும் பிஹெச்இஎல் நிறுவனம் வழங்கும். இந்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் திட்டத் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும்.

இந்த 6,400 மெகாவாட் மதிப்பிலான ஆணை, பிஹெச்இஎல் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன்கள் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள நீடித்த நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும். உலகளவில் 214 ஜிகாவாட்டிற்கும் (GW) அதிகமான மின் உற்பத்தி உபகரணங்களை நிறுவியுள்ள பிஹெச்இஎல் நிறுவனம், இந்தியாவின் எரிக்தி துறையில் ஒரு முக்கிய தூணாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது.

2025-26 நிதியாண்டின் இறுதியில், பிஹெச்இஎல் நிறுவனம் நாட்டின் பயன்பாட்டுக்கு அனல் மின் திறனில் 54 சதவீத பங்கையும், அணுசக்தியில் (இரண்டாம் நிலை) 60 சதவீத பங்கையும், நீர்மின்னேற்றத்தில் 43 சதவீத பங்கையும் தக்கவைத்துக் கொண்டு தனது சந்தை ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. மொத்தத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த பயன்பாடு அளவிலான பாரம்பரிய மின் உற்பத்தித் திறனில் 53 சதவீத பங்கை பிஹெச்இஎல் நிறுவனம் கொண்டுள்ளது.



முந்தைய செய்தி
தங்கம், வெள்ளி விலை உயர்வு கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்கு 5.47% ஏற்றம்
அடுத்த செய்தி
பார்தி ஏர்டெல் லாபம் 24% உயர்வு: Q2-வில் ரூ.10,710 கோடியாக அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்